பிக் பாஸ் 3: நாள் 55 – எதுவாகினும் ஏற்க முடியாது மதுவின் செயலை!
நம் நிஜ வாழ்க்கையில் சூழ்நிலைகள் தான் நமக்கு வாய்ப்புகளைத் தருகிறது. அந்தத் தருணத்தில் எப்படி ரியாக்ட் செய்கின்றோமோ அதுக்கேற்ற மாதிரி தான் விளைவுகளும் இருக்கும். ஒருத்தன் நல்லவனாகறதுக்கும், கெட்டவனாகறதுக்கும் நடுவில் ஒரு சின்ன கோடு தான் இருக்கு. பிக் பாஸ் வீடும் அப்படித்தான். இங்கே இந்த மாதிரி சூழ்நிலைகள் வரலாம் எனத் தெரிந்து தான் அங்கே போகின்றனர். அப்படி ஒரு மொமென்ட்ல தான் தர்ஷன் ஹீரோவானார். 'என்னடா இது இந்த வனிதா இப்படிப் பேசுறார்? ஒருத்தர் கூட கேக்க மாட்டேங்கறாங்களே?' என ஒரு காமன் மேனுக்கான எதிர்பார்ப்பைத் தர்ஷன் பூர்த்தி செய்தார். நன்றாக யோசித்துப் பார்த்தோம் என்றால் அந்தச் சூழ்நிலை, அந்த வாய்ப்பு அங்கே இருந்த எல்லோருக்கும் இருந்தது. அன்று யார் பேசியிருந்தாலும் ஹீரோவாகிருக்க முடியும். ஆனால் எல்லோரும் தயங்கி தான் நின்றனர். அது தானாக அமைந்த சூழ்நிலை தான்.
சில சமயம் உருவாக்கப்பட்ட சில ...