Shadow

பிக் பாஸ் 3: நாள் 47 – கஸ்தூரியின் வில்லுப்பாட்டும் கூட்டாம்பொங்கலும்

bigg-boss-3-day-47

‘சென்னை சிட்டி கேங்ஸ்ட்ர்’ பாடலோடு தொடங்கியது நாள்.

கஸ்தூரி வில்லுப்பாட்டு பாடுவாராம். கமல் பாஷையில் சொல்ல வேண்டுமென்றால் நாராசமாக இருந்தது. பேரில் “வின்” வைத்திருக்கிற கவினுக்கு “லாஸ்” தான் பிடிக்குதென லைன் எழுதிக் கொடுத்தது யாருய்யா? சட்டு புட்டுன்னு முடிந்தால் தவலையென இருந்தது.

கவினிடம் விசாரணை நடந்தது. ‘நாலு பொண்ணுகளை ஒரே நேரத்துல லவ் பண்றது காமெடியா உனக்கு?’ எனச் சிரித்துக் கொண்டே ஊசி குத்திக் கொண்டிருந்தார் கஸ்தூரி. ‘இதே விஷயத்தை ஒரு பொண்ணு செஞ்சிருந்தா உனக்குக் காமெடியா இருந்திருக்குமா?’ எனக் கஸ்தூரி கேட்ட பொழுது, கவினுக்கு மூஞ்சியே இல்லை. முடிந்து போன விஷயத்தை மறுபடியும் கிளறிக் கொண்டே இருக்கிறார். கூடிய சீக்கிரம் வெடிக்கும்.

கேப்டனுக்கான டாஸ்க். ஒரு பெரிய கேன்வாஸில், 3 பேரும் கலர் பெயின்ட் அடிக்கவேண்டும். எந்த கலர் பெயின்ட் அதிகமாக இருக்கோ அவங்க தான் வின்னர். ஆரம்பத்தில் சேரன் லீடிங்கில் இருந்தார். ஆனால் மொத்த வீடும் சாண்டிக்கு ஆதரவாக இருந்தது. ப்ரெஷில் அடித்துக் கொண்டு இருந்தவர், அப்புறம் பக்கெட்டோட ஊத்திக் கொண்டிருந்தார். நடுவராக இருந்த கஸ்தூரி சாண்டி தான் வின்னர் என அறிவித்தார்க.

சேரனுக்கு இது பெரிய ஏமாற்றம் தான். கேப்டனாகுறதுக்கு அவருக்கு இன்னொரு சான்ஸ் கிடைக்குமா எனத் தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் சின்ன பசங்களாக இருக்கும் போது டாஸ்கில் ஈடு கொடுக்க முடியாது. கஸ்தூரி, ‘சாரி’ சொல்லும்போது அதைத்தான் சொன்னார் சேரன். 7 வாரத்துல 5 வாரம் எவிக்ஷனில் இருந்தாச்சு. அட்லீஸ்ட் கேப்டனானால் ஒரு வாரம் நாமினேஷனில் இருந்து தப்பிக்கலாமே என யோசித்தேன் எனப் புலம்பினார்.

சாண்டி கேப்டனாகப் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த 2 நிமிடம் நன்றாக இருந்தது.

லக்சரி பட்ஜெட் டாஸ்கில், 2000 பாயிண்ட் கிடைத்தும்ம், ஆங்கிலத்தில் பேசினதால் 250 பாயின்ட் பறிக்கப்பட்டது. மீதி பாயின்ட்ஸ்க்கு லிஸ்ட் எழுதும் போது ஒரே களேபரம். ஆளாளுக்கு ஒன்று சொல்லிவிட்டு, பின், ‘இதை எழுதல, அதை எழுதல’ எனப் புகார். ‘கஸ்தூரி ஸ்லோவா எழுதினாங்க’ என வாய் தவறி மது சொல்ல, ‘இஃப் யூ ஆர் பேட், ஐயாம் யுவர் டேட்’ என கஸ்தூரி விளக்கம் கொடுக்க, விட்டால் போதும் என ஒடினார் மது.

அடுத்து ஆர் கே ஜி நெய் வழங்கிய ஒரு டாஸ்க். சமையலுக்குத் தேவையான பொருட்களை இரண்டு டீம் செலக்ட் பண்ண, என்ன சமைக்க வேண்டுமென அதற்கப்புறம் தான் சொல்வார்களாம். இந்த மாதிரி எல்லாம் யோசிக்க எப்படித்தான் முடிகிறதோ?

கஸ்தூரி தலைமையில் ஒரு டீம், தர்ஷன் தலைமையில் ஒரு டீம். நடுவராக மது இருந்தார். தர்ஷன் டீமுக்கு கருவேப்பிலை கொத்து மாதிரி ஒரே ஒரு பொண்ணு. ஷெரின் மட்டுமே. முந்தின நாள், ‘சமைக்கத் தெரியுமா?’ எனக் கேட்டதற்கு, ‘சைவம் மட்டும் தான் செய்வேன்’ எனச் சொன்ன கஸ்தூரி, சர்க்கரை பொங்கல் செய்ய கடலைப் பருப்பை உள்ளே போட்டதைப் பார்த்து ஹவுஸ்மேட்ஸ்க்கு ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும். ஒரு வேளை சர்க்கரைப் பொங்கல் சைவத்தில் இல்லையோ? மது பக்கத்தில் இருந்தாலும் ஒன்றும் சொல்லவில்லை. அவங்க எடுத்ததை எல்லாம் போட்டு கூட்டாஞ்சோறு மாதிரி கூட்டாம்பொங்கல் செய்து கொண்டிருந்தார். பஸ்ஸர் அடித்த பொழுது பார்த்தால் வேகவே இல்லை. அப்படியே எடுத்து வைத்துவிட்டார்.

இதற்கு நடுவில், மது வெளிய இருந்த டீமுக்கு டிப்ஸ் கொடுத்துவிட்டு வந்தார். தர்ஷன் டீம் நன்றாகவே செய்தனர். பஸ்ஸர் அடிக்கிறதுக்கு முன்னாடியே செய்து முடித்து அசத்திட்டாங்க. அவங்க தான் வின்னரும் கூட.

இந்த டாஸ்க் முடிந்ததுக்குப் பின், சர்க்கரை பொங்கல் செய்ய நீங்க சொல்லிக் கொடுத்தது தப்பு என சேரன் மதுவிடம் பொங்கல் வைத்துக் கொண்டிருந்தார். “எங்கிட்ட கேட்டாங்க நான் சொன்னேன். இவங்களும் கேட்டிருந்தா நான் சொல்லிருப்பேன். இவங்க கேக்கல” என மது சொல்லிக் கொண்டிருக்கும் போது, கஸ்தூரி ஒன்றுமே பேசாமல் உட்காந்து கொண்டிருந்தார். ஏதாவது பேசினால், எங்க நம்ம மேல திரும்பிருவாங்களோ என்றொரு பயம்.

கஸ்தூரிக்குச் சமைக்க தெரியும் எனச் சொன்னவுடனே அவங்க பக்கம் போனவங்க எல்லாம், மறுபடியும் மதுவிடம் வந்தாகவேண்டும் (நம்பியாரிடம் கெஞ்சுகின்ற கவுண்டமணி டெம்ப்ளட் போட்ட மீம் – இந்தச் சூழலுக்குச் செட்டாகும்).

உண்மையில், இந்த டாஸ்கில் தர்ஷன் டீமுக்கு மது சப்போர்ட் செய்தது வெளிப்படையாவே தெரிந்தது. இது வரைக்கும் யார் டீம்லேயும் இல்லாமல் தனியாவே சுற்றிக் கொண்டிருந்த மதுவுக்கு, கஸ்தூரியின் வரவு கொஞ்சம் பயத்தைக் கொடுத்துள்ளது. கஸ்தூரியும் மதுவை டார்கெட் பண்ற மாதிரி தான் தெரியுது. தன்னை விட சீனியர், நேரடியாக எதிர்க்க முடியாத கன்டென்ஸ்டன்ட்டாக கஸ்தூரி உர். ஆக தர்ஷன், சாண்டி டீமில் தன்னையும் இணைத்துக் கொள்ள,க இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக் கொண்டார்.

அப்புறம் மறுபடியும் ஒரு டாஸ்க். எத்தனை? எல்லாரும் சுற்றி அமர்ந்து, நடுவில் பாட்டிலைச் சுற்றி விட்டு அது யாருக்கு நேராக இருக்கோ அவர்களில் ஒருத்தர் கேள்வி கேட்க ஒருத்தர் பதில் சொல்லவேண்டும். அபிராமி ஒரு லவ் ப்ரசென்டேஷன் கொடுத்தார். சேரன் சொன்ன பதில்கள் அட்டகாசம். அவரோட அனுபவத்தின் வெளிப்பாடுகள். ஷெரினிடம், ‘நீங்க எப்பவும் இப்படியே இருங்க’ எனச் சொன்ன போது கன்னம் சிவந்து வெக்கப்பட்டார் ஷெரின்.

மொத்தத்தில் நேற்றைய எபிசோட் கஸ்தூரி அணி செய்த சர்க்கரைப் பொங்கல் மாதிரி தான் இருந்தது. ஆனாலும் அப்பப்போ தர்ஷன் டீம் செய்த சர்க்கரைப் பொங்கல் மாதிரி கொஞ்சம் இனிப்பாவும் இருந்தது.

– மகாதேவன் CM