பிக் பாஸ் 3: நாள் 42 – “மகனே கமல்!”
சம்பிரதாயத்துக்கு வீட்டுக்குள்ளே இரண்டு ஷாட் காண்பித்தனர். கோட் சூட்டில் ஆண்டவர் வருகைத் தந்தார். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' எனச் சொல்லி வகுப்பெடுத்தார். நமக்கு வர பிரச்சினைக்கு நம்முடைய செயல்கள் தான் காரணமென வீட்டுக்குள் இருக்கிறவர்களைச் சுட்டிக் காட்டிப் பேசினார்.
இந்த வார டாஸ்கில் எல்லோரும் நடிகர் / நடிகை வேஷம் போட்டனர் இல்லையா? அதே கேரக்டரில் கமலிடம் கேள்வி கேட்கனுமென ஒரு விளையாட்டு. நன்றாகவே இருந்தது.
சரவணனே ஆரம்பித்தார். 'நடிகர் சங்கத்தில் நீங்க பொறுப்பெடுத்துக்கலாமே! ஏன் செய்யலை?' என விஜயகாந்த் கேரக்டரில் கேள்வி கேட்டார்.
"நான் பின்னாடி இருந்து ஆக்ஷன், கட்லாம் சொல்லிட்டுத்தான் இருக்கேன். நடிகர் சங்கமா இருந்தாலும் அங்க நான் தான் டைரக்டர்" எனச் சொன்னார். இதுக்கு சினிமா உலகம் என்ன சொல்லப்போகுதென வெயிட் பண்ணிப் பார்க்கவேண்டும்.
சிம்பு கேள்விக்குப் பங்கமாகக் கலாய்த்து, பதில் ச...