32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

பிக் பாஸ் 3 : நாள் 37 – ஏன் பிக் பாஸ்? ஏன் இப்படி?

Dinesh R சேலம் Published: 31/07/2019 1 நிமிட வாசிப்பு Updated: 05/08/2019 பிக் பாஸ்
எழுத்து அளவு:

losliya---bigg-boss---day37

காலையில் ராப் பாடல் பாடுவது எப்படி என முகின் சொல்லித் தருவது தான் டாஸ்க். ஆனா அவர் சொல்லிக் கொடுப்பதற்கு முன்பே அபியும் ரேஷ்மாவும் பிஸ்து காட்டினர். ஹேட்ஸ் ஆஃப்.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த வார லக்சரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸுக்கும் ஒவ்வொரு கேரக்டர், ஒவ்வொரு பாட்டு. அந்தப் பாட்டு ப்ளே ஆகும் போது லிவிங் ஏரியாவில் போடப்பட்ட மேடையில் வந்து ஆடவேண்டும். சேரன், சரவணன், கவின், லோஸ்லியா, சாண்டி, மதுமிதா எல்லோரும் நேற்று ஆடினார்கள். கேரக்டராகவே மாறி ஆக்டிங் கொடுத்துக் கொண்டிருந்தனர். லோஸ்லியா மட்டும் நான் எந்த கேரக்டர் கொடுத்தாலும், ‘நான் இப்படித்தான் இருப்பேன், நான் ஒரு பொம்பளை விஜய்சேதுபதிடா’ என ஆடிக் கொண்டிருந்தார்.

டான்ஸ் ஆடும் போது ஆடுகிறவர்களைக் காட்டாமல், மற்றவரின் முகங்களைக் காட்டிய எடிட்டிங் டீமுக்கு, மூக்கு மேல் ஒரு பஞ்ச் வைக்கவேண்டும். எபிசோடைப் பார்க்கவே மிக எரிச்சலாக இருந்தது.

அதற்கு அப்புறம், எல்லோரும் நார்மல் மோடுக்கு வந்ததுக்குப் பின் லியா இலங்கையைப் பற்றியும், முகின் மலேசியாவைப் பற்றியும் பேசினார்கள்.

மற்றபடி பெரிய சுவாரசியம் எதுவும் இல்லாத நாள்.

பி.கு.: நான் அடிஷனல் ஷீட் வாங்கி எழுதுவதில் ரெக்கார்ட் பண்றவன். என்னைப் போய் இத்துனூண்டு எழுத வச்சுட்டீங்களே!! க்ர்ர்ர்ர்..

மகாதேவன் CM

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.