Shadow

Tag: Bigg Boss Sakshi Agarwal

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பிக் பாஸ் 3: நாள் 75 | ‘பயங்கரமா ஸ்கெட்ச் போடுவோம்’ – நரி விருது வென்ற சாண்டி

பிக் பாஸ்
பாய்ஸ் அணி உள்ளே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். கவின், மீசை, தாடி எல்லாம் ட்ரிம் பண்ணி சின்ன பையன் மாதிரி இருந்ததை அவரே கிண்டல் பண்ணிக் கொண்டார். சாண்டி ஸ்கூல் டாஸ்கிக் பேசின மாதிரி பேசினார். இந்த வீட்டில் சாரி கூடாது, சிரிக்கக் கூடாது, அழக்கூடாது என கவின் சொல்ல, 'மொத்தத்துல மனுசனாவே இருக்கக்கூடாது' என சாண்டி முடித்தது அல்டிமேட். ஷெரின் இப்பவும் அழுது கொண்டே இருக்க, தர்ஷன் சமாதானபடுத்த பேசினார். 'யாரோ சொல்றதை நீ ஏன் சீரிஸா எடுத்துக்கிற?' எனக் கேட்ட போது, 'அது யாரோ இல்ல, என் ப்ரெண்ட். நீ பேசினா எப்படி ஹர்ட் ஆவேனோ, அப்படித்தான் வனிதாவும்' எனச் சொன்னபோது, 'இவ்வளவு அழுகையிலேயும் எவ்வளவு தெளிவாகப் பேசுகிறார்' என ஆச்சரியமாக இருந்தது. ஒரு நண்பர் நம்மைத் தப்பாக பேசிட்டார் எனத் தெரிந்தால், 'அவன்லாம் ஒரு மனுசனா?' என அந்த நொடியிலேயே தூக்கிப் போடும் உலகத்தில், இம்புட்டு நல்ல மனசு ஷெரினுக்கு ஆகா...
பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

பிக் பாஸ் 3: நாள் 49 – ‘கேம் தான விளையாடினார்? ஏன் சாரி?’ – சாக்‌ஷியின் அப்பா

பிக் பாஸ்
நம் கணக்குப்படி 49வது நாள்தான். ஆனால், ஹவுஸ்மேட்ஸின் அறிமுக படலத்தோடு சேர்ந்து 50வது அத்தியாயம் நிறைவடைந்தது. அதனால் கமல் 50 வது நாள் கொண்டாட்டம் என அறிவித்தார். நேற்று கமல் போட்டிருந்த உடை கண்ணைப் பறிக்கும் அளவுக்கு பளீரென இருந்தது. நேராக வீட்டுக்குள் நுழைந்த உடனே வெற்றியடைய வாய்ப்புள்ளவர்கள் யாரென ஹவுஸ்மேட்ஸிடம் கேட்டார். பெரும்பான்மையானவர்கள் தர்ஷன், சாண்டி பெயர்களைச் சொன்னது ஆச்சரியமில்லை. ஆனால் மூன்றாவதாக மது இடம் பிடித்தது தான் அதிசயமாக இருந்தது. கலாச்சாரக் காவலர் பட்டம், சில கான்டர்வர்சியான சண்டைகள் இதையெல்லாம் தாண்டித் தன்னை ஒரு வலிமையான போட்டியாளராக முன்னிறுத்தியிருக்கிறார் மது. மதுவுக்கும் மற்ற பொண்ணுங்களுக்கும் ஒரு மிகப் பெரிய வித்தியாசம் இருக்கு. மது முடிந்து போன விஷயத்தைக் கிளறுவதே இல்லை. அதை மனதுக்குள் வைத்துக் கொண்டு பகைமை பாராட்டுவதில்லை. அது சாண்டியோ, ஷெரினோ, மறந்...