பூமர் அங்கிள் விமர்சனம்
நல்லதொரு சூப்பர் ஹீரோ ஸ்பூஃப் படத்திற்கு முயற்சி செய்துள்ளார் இயக்குநர் ஸ்வதேஷ் MS.
சேஷு, பழைய ஜோக் தங்கதுரை, KPY பாலா, ரோபோ ஷங்கர், யோகிபாபு ஆகியோர் 90’ஸ் கிட்ஸ். இதில், யோகிபாபுவிற்கு மட்டும் கல்யாணமாகிவிட, அவரால் கல்யாணமாகாமல் இருக்கும் மற்றவர்கள், யோகிபாபுவைப் பழிவாங்க அவரது மாளிகைக்குள் களமிறங்குகின்றனர். மாளிகைக்குள் நடக்கும் கலாட்டாவே படத்தின்கதை.
யோகிபாபுவின் மனைவி ரஷ்ய உளவாளி. யோகி பாபுவின் தந்தையான மதன் பாப் கண்டுபிடித்த ஆயுதங்களைத் திருடுவதே அவரது நோக்கம். மதன் பாப் கண்டுபிடித்த சில ஆயுதங்களை அமெரிக்க அரசு திருடி ஸ்பைடர் மேன், ஹல்க், தோர் ஆகியோரை உருவாக்கிவிட்டனராம். படம் பார்க்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் ரசிகர்கள் நிலைமை தான் அந்தோ பரிதாபம். நகைச்சுவையாகவோ, கலகலப்பாகவோ கூடக் கொண்டு போகாமல், சகிக்கமுடியாதளவு கடியை ஏற்படுத்தும் மிகவும் சிரத்தையற்ற திரைக்கதையை எழுதி...