கேப்டன் மார்வெல் விமர்சனம்
'அவெஞ்சர்ஸ் - எண்ட் கேம்' படத்தில் தானோஸினை மண்ணைக் கவ்வச் செய்யும் போகும் சக்தி எது? கேப்டன் மார்வெல் என்ற க்ளூவினை 'அவெஞ்சர்ஸ் - இன்ஃபினிட்டி வார்' படத்தில் கொடுத்திருப்பார்கள்.
யார் அவர், அவரது சக்தி என்ன போன்ற விஷயங்களுக்குப் பதிலாக வந்துள்ளது கேப்டன் மார்வெல் படம். மார்வெலின் கதை சொல்லும் பாணிக்கு, இப்படம் எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யாவிட்டாலும், கேப்டன் மார்வெல் தானோஸ்க்குப் பெரும் சவாலாக இருப்பார் எனும் நம்பிக்கையைத் தருகிறது.
யூ.எஸ். ஏர் ஃபோர்ஸில் பைலட்டாக இருக்கும் கெரோல் டென்வெர்ஸ் எப்படி சூப்பர் ஹீரோவாக மாறுகிறார் என நான்-லீனியராகச் சொல்லியுள்ளனர். வொண்டர் வுமன் படத்தில் கேல் கேடோட் கதாபாத்திரத்தின் நோக்கம் மிகத் தெளிவாக உருவாக்கப்பட்டிருக்கும். ஆனால், கேப்டன் மார்வெலான ப்ரீ லார்சனுக்கு அந்தக் கொடுப்பிணை வாய்க்காததுதான் படத்தின் ஈர்ப்பளவில் சுணக்கம் ஏற்படுவதற்குக் காரணம்...