Shadow

Tag: Chennai Comic Con

சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

சென்னை காமிக் கான் – ரெட் ஹல்க் | கேப்டன் அமெரிக்கா

அயல் சினிமா
“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்” படத்திற்காகக் காத்திருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது சென்னை காமிக் கான் நிகழ்ச்சி. அற்புதமாகவும், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாகவும் அமைக்கப்பட்டிருந்தது மார்வெல் அரங்கு. கேப்டன் அமெரிக்காவுடனும், ரெட் ஹல்க்-உடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிறப்பரங்கில் அமைக்கப்பட்டிருந்த ரெட் ஹல்க் ஆங்ரி-மீட்டரில், ரசிகர்கள் தங்கள் பலத்தைக் கொண்டு சுத்தியலால் அடித்து விளையாடினர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட், மற்றும் அவரது புதிய இறக்கைகளுடன், ரெட் ஹல்க் போல் உடையணிந்தவர் ரசிகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றனர். மார்வெலின் புதுப்படத்திற்கான எதிர்பார்ப்பைக் கட்டியம் கூறும் விதமாக அமைந்தது அரங்கில் வரிசையாக நின்றிருந்த ரசிகர்களின் மகிழ்ச்சி. ‘பிரேவ் நியூ ...