
“கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்” படத்திற்காகக் காத்திருக்கும் மார்வெல் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்தது சென்னை காமிக் கான் நிகழ்ச்சி. அற்புதமாகவும், புகைப்படம் எடுக்கும் அனுபவத்தை மேம்படுத்தும்விதமாகவும் அமைக்கப்பட்டிருந்தது மார்வெல் அரங்கு. கேப்டன் அமெரிக்காவுடனும், ரெட் ஹல்க்-உடனும் ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். ஒரு சிறப்பரங்கில் அமைக்கப்பட்டிருந்த ரெட் ஹல்க் ஆங்ரி-மீட்டரில், ரசிகர்கள் தங்கள் பலத்தைக் கொண்டு சுத்தியலால் அடித்து விளையாடினர். காட்சிப்படுத்தப்பட்டிருந்த கேப்டன் அமெரிக்காவின் ஷீல்ட், மற்றும் அவரது புதிய இறக்கைகளுடன், ரெட் ஹல்க் போல் உடையணிந்தவர் ரசிகர்களின் சிறப்புக் கவனத்தைப் பெற்றனர். மார்வெலின் புதுப்படத்திற்கான எதிர்பார்ப்பைக் கட்டியம் கூறும் விதமாக அமைந்தது அரங்கில் வரிசையாக நின்றிருந்த ரசிகர்களின் மகிழ்ச்சி.
‘பிரேவ் நியூ வேர்ல்ட்’டில் சாம் வில்சனாக திரும்புகிறார் ஆண்டனி மேக்கி. இப்படத்தில் அவர் கேப்டன் அமெரிக்காவின் கவசத்தை முழுமையாகத் தன்வயப்படுத்திக் கொள்கிறார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி தேடியஸ் ரோஸாக ஹாரிசன் ஃபோர்டு நடித்துள்ளார். ஜனாதிபதியுடனான சாமின் சந்திப்பில் தொடங்கும் படம், சர்வதேச சூழ்ச்சியொன்றில் வலுவாகச் சிக்கிக் கொள்கிறார். கெவின் ஃபீஜ், நேட் மூர் மற்றும் மால்கம் ஸ்பெல்மேன் ஆகியோர் படத்தைத் தயாரித்துள்ளார்கள். ‘கேப்டன் அமெரிக்கா: தி வின்டர் சோல்ஜர்’, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ ஆகிய படங்களை ரூஸோ பிரதர்ஸ் இயக்க, இப்படத்தை ஜூலியஸ் ஓனா இயக்கியுள்ளார்.
ஆங்கிலம், தமிழ், தெலுங்கி, இந்தி ஆகிய மொழிகளில் ‘கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட்’ படம், ஃபிப்ரவரி 14 ஆம் தேதி அன்று வெளியாகிறது.