Dungeons & Dragons: Honor Among Thieves விமர்சனம்
‘டன்ஜியன்ஸ் & டிராகன்ஸ்’ எனும் டேபிள் டாப் விளையாட்டின் கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட படமிது. டன்ஜியன் என்றால் பாதாளச் சிறை என்று பொருள் கொள்ளலாம். ஆனால் பதினான்காம் நூற்றாண்டில் வழக்கத்திற்கு வந்த இந்த ஆங்கிலச் சொல், ஃப்ரெஞ்சு சொல்லின் மூலத்தில் பயன்படுத்தப்பட்ட ‘அரண்மனையின் கோபுரம்’ என்ற பொருளிலேயே உபயோகப்படுத்தியுள்ளனர். காலப்போக்கில், பாதாளச் சிறையைக் குறிக்கும் சொல்லாக டன்ஜியன் மாறியுள்ளது. டிராகன் என்பது ஐரோப்பியத் தொன்மவியலில் வரும் நெருப்பைக் கக்கும் அமானுஷ்ய விலங்காகும்.
இறந்துவிடும் தன் மனைவியின் உயிரை மீட்பதற்காகத் தேவைப்படும் ஒரு மந்திரப்பதக்கத்தைத் திருட முற்படுகிறான் எட்கின் டார்விஸ். தோழி ஹோல்கா கில்கோர், இளம் மந்திரவாதி சைமன் ஒளமர், ஃபோர்ஜ் எனும் ஏமாற்றுக்காரக் கலைஞர், சிவப்புச் சூனியக்காரி சோஃபினா ஆகியோருடன் குழுவாகச் சென்று, மந்திரப்பதக்கத்தைத் திருடிவிட்டாலு...