Shadow

Tag: Cobra review

கோப்ரா விமர்சனம்

கோப்ரா விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
டார்கெட்டைக் குறி வைத்துவிட்டால், அதற்காக எவ்வாறாயினும் உருமாறி, கணித ஞானத்தைக் கொண்டு இலக்கைக் கச்சிதமாகத் தாக்கும் கான்ட்ராக்ட் கொலையாளிக்கு ‘கோப்ரா’ எனக் காரணப் பெயர் சூட்டப்படுகிறது. அதி ரகசியமாகச் செயற்படும் கோப்ராவின் திட்டங்கள் ஒரு ஹேக்கரால் இன்டர்போலுக்குத் தெரியப்படுத்தப்படுகிறது. யார் அந்த ஹேக்கர், ஹேக்கருக்கும் கோப்ராவிற்கும் இடையே என்ன பிரச்சனை, ஹேக்கர் - கோப்ரா இருவரையும் ஏன் தொழிலதிபர் வேட்டையாட நினைக்கிறான் போன்ற கேள்விகளுக்கான பதிலே படத்தின் முடிவு. படத்தில் மூன்று கதாநாயகிகள். பாடல் காட்சிகளுக்கென்று நேர்ந்து விடப்படாமல், மூவருக்குமே பிரதான பாத்திரங்கள் கொடுத்து வியக்க வைத்துள்ளார் அஜய் ஞானமுத்து. ஹீரோயிசப் படமென்பதால் நாயகிகளை அழுத்தமாகக் கதையில் உபயோகிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. படத்தை சைக்காலஜிக்கல் த்ரில்லர் என்று கூட வகைமைப்படுத்தலாம். சதா சர்வகாலமும் மூளைக்...