Tag: Common Man
ரசிகர்களைச் சுமக்கும் வேதாளம்
இது வேதாளம் சொல்லும் கதை எனும் படத்தில் பல விசேஷங்கள் உண்டு.
முதலாவதாக, க்ரெக் புரிட்ஜ் எனும் வெள்ளைக்கார வ்ரெஸ்ட்லர் ஸ்டன்ட் மாஸ்டராகப் படத்தில் பணியாற்றுவதோடு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். முதல்முறையாக புரிட்ஜைப் பார்க்கும்போது, க்ரெக் தன் குழுவினருடன் உண்மையாகவே மல்யுத்தம் செய்வதாக நினைத்துள்ளார் இயக்குநர் ரதீந்தரன். புரிட்ஜ் உருவாக்கிய வ்ரெஸ்ட்லிங் டெக்னிக்களைக் கொண்டு, 'ட்ரையல் ஆஃப் பிளட் (Trial of blood)' எனும் குறும்படத்தை இயக்கியுள்ளார் ரதீந்தரன். நான்கு வருடங்களாகவே முழு நீள ஆக்ஷன் படம் ஒன்றினை இருவரும் இணைந்து எடுக்கப் பேசி வந்த நிலையில், 'இது வேதாளம் சொல்லும் கதை' படத்திற்காகத் தன் அனைத்து வேலையையும் ஓரங்கட்டி விட்டு இந்தியா வந்துள்ளார் க்ரெக்.
அறுபதுகளுக்குப் பின்னான சண்டைக் காட்சிகளில் யதார்த்தம் கம்மியாகக் காணப்படுவதாக ஓரெண்ணம் ரதீந்தரனுக்கு. ரோப் கட்ட...
இது வேதாளம் சொல்லும் கதை – பத்திரிகையாளர் சந்திப்புப் படங்கள்
" order_by="sortorder" order_direction="ASC" returns="included" maximum_entity_count="500"]
றெக்க விமர்சனம்
எத்தனை பேர் வந்தாலும் அடித்து துவம்சம் செய்யக் கூடியவன் சிவா என்பது தான் இந்த 'மாஸ் ஹீரோ' படத்தின் ஒரு வரிக் கதை. ஆனால், சிவாவிற்கு சின்னச் சின்ன சண்டை எல்லாம் போடுவதில் விருப்பமில்லை. அதுக்கும் மேல், பெரிய சண்டைக்குக் காத்துக் கொண்டிருப்பவன்.
கிறுக்குத்தனமான கதாநாயகியாக திரையில் தோன்ற முகத்தில் குழந்தைத்தனமோ, அப்பாவித்தனமோ மிகவும் அவசியம். இப்படியான க்ளிஷேவை லட்சுமி மேனனைக் கொண்டு உடைத்துள்ளார் இயக்குநர். பாரதி மணிவாசகமாக மேடையில் இருந்து அவர் காட்டும் கம்பீரம் நன்றாக இருந்தாலும், பேசியே இராதவன் ஒருவனுடன் ஊரை விட்டு ஓடத் தயாராக இருக்கும் கொடுமை எல்லாம் நகைச்சுவையாகவும் இல்லாமல் சுவாரசியமாகவும் இல்லாமல் கடுப்பேற்றுகிறது. நாயகியை மிகவும் கவர்ந்த ஒருவனைக் கொல்ல, அவளது தந்தையின் அடியாட்கள் சாரைச் சாரையாய் வருகிறார்கள். சிவா ஆட்களை அவர்களது வாகனத்தோடு பறக்க விடுகிறார். 'வாவ்.. வாட் எ மேன்!' எ...
ஆரஞ்சு மிட்டாய் விமர்சனம்
இரண்டு மணி நேரத்துக்கும் பத்து நிமிடங்கள் குறைவான நீளம் கொண்ட படம். குத்துப் பாட்டுகளோ, சண்டைக் காட்சிகளோ இல்லாத படம்.
தனிமையில் வாடும் முதியவரான கைலாசம், தனக்கு நெஞ்சு வலியென 108 சேவைக்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்கிறார். கைலாசத்திடம் மாட்டிக் கொண்டு, ஆம்புலன்ஸ் ட்ரைவரும் இ.எம்.டி. (Emergemcy Medical Technician) சத்யாவும் படும்பாடுதான் ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை.
விஜய் சேதுபதியின் அறிமுகத்துக்குப் பின் படம் கலகலக்கத் தொடங்குகிறது. ஆனால் படம் தொடங்கிய நாற்பதே நிமிடங்களுக்குள், படத்துள் ரசிகர்கள் ஆழத் தொடங்கும் முன்பாகவே இடைவெளி வந்துவிடுகிறது. ஏன்? எதற்கு? என்ன கதை? என்ற நம்மைக் குழப்பத்தில் ஆழ்த்திய பின் அசலான படம் தொடங்குகிறது. அதன் பின்னும் படத்தில் கதை எனப் பெரிதாகக் கிடையாது. உயிருடன் இருக்கும்போது தன் தந்தையின் அருமையை உணராமல் போய்விட்டோமே என மனக் கிலேசத்தில் உழலும் சத்யாவுக்கு, ...