
2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்?
சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் "2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
தயாரிப்பாளர் தனஞ்செயன், “2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள். எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார். முதலிலேயே இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். சுசி சார் இந்தப் படத்தில் என்ன செய்கிறார் என ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து, இந்தப் படம் பார்க்க முடியுமா என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்றைய கால...