Shadow

2K லவ் ஸ்டோரி – இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள்?

சிட்டி லைட் பிக்சர்ல், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் “2K லவ்ஸ்டோரி” ஆகும். க்ரியேட்டிவ் என்டர்டெயினர்ஸ் சார்பில் தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார். வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

தயாரிப்பாளர் தனஞ்செயன், “2கே கிட்ஸ் ஸ்டோரியில் நான் என்ன செய்கிறேன் எனக் கேட்காதீர்கள். எனக்கும் ஆச்சரியம் தான். சுசி சார் மிக அருமையாக இன்றைய தலைமுறை கதையைப் படமாக்கியுள்ளார். முதலிலேயே இந்தப் படம் பற்றிக் கேள்விப்பட்டிருந்தேன். சுசி சார் இந்தப் படத்தில் என்ன செய்கிறார் என ஆச்சரியமாக இருந்தது. சில மாதங்கள் கழித்து, இந்தப் படம் பார்க்க முடியுமா என்று கேட்டார். பார்த்தவுடனே எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இன்றைய கால இளைஞர்கள் எப்படி உறவுகளைக் குழப்பிக் கொள்கிறார்கள். எப்படி வாழ்கிறார்கள், அவர்கள் உலகம் எப்படி இருக்கிறது என்பதை மிக அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சுசி சார். மிகச்சிறந்த இயக்குநர், நாம் கொண்டாடப்பட வேண்டிய இயக்குநர். வெண்ணிலா கபடிக் குழு படத்தில் இணைய வேண்டியது மிஸ் ஆகிவிட்டது. ஆனால் இதில் மிஸ் ஆகிவிடக்கூடாது என உடனே நான் செய்கிறேன் என்றேன். படம் பார்த்து இரண்டாம் பாதியில் எனக்கு சில காட்சிகளில் கருத்து வேறுபாடு இருந்தது, ஆனால் அதைச் சொல்லத் தயங்கினேன். ஆனால் சுசி சார் அதை நான் மாற்றி விட்டேன் என்றார், என் கருத்துக்களுக்கு மதிப்பு தந்தார். இயக்குநர்கள், ‘என் படத்தில் கருத்துச் சொல்ல நீ யார்? என் படத்தை அப்படியே ரிலீஸ் செய்வது என்றால் செய்!’ என்று சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லாமல், நான் சொன்னதைக் கேட்டு, மக்கள் ரசிக்க வேண்டும் என்பதற்காகப் படத்தின் காட்சிகளை மாற்றியமைத்த சுசீந்திரன் சாருக்காக இந்தத் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

இயக்குநர் சுசீந்திரன், “பிரேமலு ரிலீசான அன்று அது யாருக்கும் தெரியாது, அடுத்த ஷோவில் உலகத்திற்கே தெரிந்தது. அது போல இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும்” என்றார்.

வெடிங் போட்டோஃகிராஃபி எடுக்கும் ஒரு குழு இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்பக் குழு:-

இயக்கம் – சுசீந்திரன்
ஒளிப்பதிவு – V.S.ஆனந்த கிருஷ்ணன்
இசை – டி.இமான்
பாடல் வரிகள் – கார்த்திக் நேதா
படத்தொகுப்பு – தியாகு
கலை – சுரேஷ் பழனிவேலு
நடனம் – ஷோபி, பால்ராஜ்
மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM)
ஆடை வடிவமைப்பு – மீரா
போஸ்டர் வடிவமைப்பு – கார்த்திக்
தயாரிப்பு நிர்வாகி -T.முருகேசன்
தயாரிப்பாளர் – விக்னேஷ் சுப்ரமணியன்