Shadow

Tag: CSK

ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

ஒரு ஃபைனலின் கதா – ஐ.பி.எல். 2019

சமூகம்
கோலகலமாகத் தொடங்கிக் கொண்டாட்டமாக முடிந்திருக்கிறது இந்தியாவின் கோடைத் திருவிழாவான ஐ.பி.எல். மூன்று முறை சாம்பியனான இரு அணிகளும், நாலாவது முறை சாம்பியனாக வென்று சாதனை படைக்கக் காத்திருந்தனர். ஒன்பது முறை இறுதியாட்டத்தில் விளையாடும் ஒரே வீரரைத் தலைவராகக் கொண்ட அணி Vs நாலு முறை இறுதியாட்டத்தில் விளையாடி நாலு முறையும் வெற்றி பெற்ற ஒரே வீரரைத் தலைவராக கொண்ட அணி. 'Odd years-ஆன 2011, 2013, 2017இல் நாங்க தான் சாம்பியன்ஸ், அதனால 2019இல் நாங்க தான் சாம்பியன்ஸ்' என மும்பை ஃபேன்ஸ் புஜத்தைத் தூக்க, 'நாங்க இதுவரை பைனல் வராத ரெண்டு வருஷமும் இந்தியா பொது தேர்தல் நடந்த 2009, 2014 தான் (தடை செய்யப்பட்ட இரண்டு ஆண்டுகள் தவிர), அதையே மாத்திட்டோம், இதை மாத்த மாட்டோமா?' என சென்னை ரசிகர்கள் பதிலுக்குத் தொடை தட்டினர். நடப்பு தொடரில் மோதிய மூன்று ஆட்டங்களிலும், மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர்கிங்ஸை வென்றிரு...