Shadow

Tag: Despicable Me

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

டெஸ்பிக்கபிள் மீ 3 விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
2010இல் தொடங்கியது ‘டெஸ்பிக்கபிள் மீ’ தொடர். அதில் வரும் மினியன்ஸ் எனும் திரைப்பாத்திரங்களுக்கு ரசிகர்களிடம் கிடைத்த பரவலான வரவேற்பின் காரணமாக வசூலில் தொடர்ந்து சாதனை புரிந்து வருகிறது. சமீபத்தில், மினியன்ஸ் போன்று மக்களின் ஏகோபித்த வரவேற்பினைப் பெற்ற திரைப்பாத்திரம் வேறில்லை என்றே சொல்லவேண்டும். சமூக வலைத்தளங்களில் எமோட்டிகான்களாகப் பயன்படுத்தப்படும் மினியன்ஸ், மக்களின் எல்லா விதமான உணர்ச்சிகளையும் தங்கள் சின்னஞ்சிறு மஞ்சள் உருவங்களின் மூலம் பிரதிபலிக்கின்றன. மக்களுக்கு மினியன்ஸிடமுள்ள மோகத்தினை மனதில் கொண்டே, யுனிவர்சல் பிக்சர்ஸ் முதல் முறையாக டெஸ்பிக்கபிள் மீ தொடரில் வந்திருக்கும் மூன்றாம் பாகத்தைத் தமிழிலும் மொழிபெயர்த்துள்ளனர். முந்தைய பாகங்களில், வெறுக்கத்தக்க வில்லனாக இருந்து, மூன்று அநாதை சிறுமிகளுக்கு நல்ல தகப்பனாக மாறி, லூசி வைல்டின் கரம் பிடித்து ஏ.வி.எல்.(Anti-Vill...
மினியன்ஸ் விமர்சனம்

மினியன்ஸ் விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Minions) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூவிடம் பணி புரியும் மினியன்ஸ்களை டெஸ்பிக்கபிள் மீ 1 & டெஸிபிக்கபிள் மீ 2 ஆகிய படங்களிலேயே பார்த்து விட்டோம். ஆனால் அவைகள் யார் என்ன ஏது போன்ற விவரங்கள் அப்படங்களில் சொல்லப்படவில்லை. அவர்களின் வரலாறைத்தான் மினியன்ஸ் படத்தில் சொல்லியுள்ளனர். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து மிக மூத்த சின்னஞ்சிறு உயிரினங்கள்தான் நம் அழகு மஞ்சள் நாயகர்களான மில்லியன்ஸ். அவர்களின் ஒரே லட்சியம் ஒரு வில்லனைத் தங்களுக்குத் தலைவனாகப் பெற வேண்டுமென்பதே.! அதற்காக அவர்கள் அணுகாத வில்லன்கள் இல்லை. நம்மை ஜுராசிக் வேர்ல்டில் அச்சுறுத்திய டைனோசரான டி-ரெக்ஸ் முதல் செங்கிஸ் கான், டிராகுலா என எண்ணற்ற வில்லன்களை நோக்குகின்றனர். என்ன சாபமோ தெரியவில்லை, தாங்கள் தேர்ந்தெடுக்கும் தலைவர்களையே ஒவ்வொரு முறையும் ஒரு விபத்தில் மினியன்ஸே கொன்று விடுகிறார்கள். மனம் வெறுத்து, லட்சியம் ந...
டெஸ்பிக்கபிள் மீ 2

டெஸ்பிக்கபிள் மீ 2

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 2) வெறுக்கத்தக்க மனிதரான க்ரூ, மூன்று பெண் குழந்தைகளின் பாசக்கார தந்தையாக மாறி விடுகிறார். அதுவும் சிறு வயதில் தன் தாயிடமிருந்து கிடைக்கப் பெற்ற அலட்சியமும் அசிரத்தையும், அவர் மனதிலூன்றி க்ரூவை நல்ல தகப்பனாக மாற்றி விட்டிருந்தது. அது மட்டுமின்றி, உலகின் தலை சிறந்த வில்லனாக வேண்டுமென்ற லட்சியத்தை எல்லாம் மூட்டை கட்டிவிட்டு, ஜாம் & ஜெல்லி செய்து விற்பவராக தொழிலையும் மாற்றி விடுகிறார். யாரோ ஒரு பிரகஸ்பதி, ஓர் ஆய்வுக்கூடத்தையே திருடி விடுகிறான். அவனைப் பிடிக்க, 'பாம்பின் கால் பாம்பறியும்' எனச் சொல்லி க்ரூவின் உதவியை நாடுகிறது ஏ.வி.எல். (Anti-Villian League). க்ரு வில்லனைக் கண்டுபிடிக்கும், முன் ஏ.வி.எல். அதிகாரியான லூசி வைல்ட் மீது காதலில் விழுந்து விடுகிறார். வில்லனைக் கண்டுபிடித்தாரா என்றும் அவரது காதல் என்னானது என்பதும்தான் படத்தின் முடிவு. அந்த பிரகஸ்பதியின் பெயர் எ...
டெஸ்பிக்கபிள் மீ 1

டெஸ்பிக்கபிள் மீ 1

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(Despicable Me 1) ‘டெஸ்பிக்கபிள் மீ’ என்றால் ‘வெறுக்கத்தக்க நான்’ எனப் பொருள் கொள்ளலாம். இந்தப் படத்தின் நாயகனான “க்ரூ” தன்னை அப்படித்தான் அழைத்துக் கொள்வார்; மற்றவர்களும் அப்படியே தன்னை நினைக்கவேண்டும் என விரும்புபவர். அவரின் வீட்டு சோஃபாவையே பெரிய முதலை வடிவத்தில் வைத்திருக்கும் கொடிய ரசனைக்காரர். க்ரூவின் அறிமுகத்தின்போதே அவரது குணத்தை அழகாக காட்டியிருப்பார்கள். அழும் சிறுவன் ஒருவனுக்கு பலூன் ஊதி அவனைச் சமாதானப்படுத்திவிட்டு, அவன் மகிழ்ச்சியுடன் பலூனின் மென்மையில் மனம் லயிக்கும்போது, அந்த பலூனை ஊசியால் குத்தி மகிழ்வார். இதுதான் க்ரூ. க்ரூவின் ஒரே லட்சியம், உலகின் ஈடியிணையற்ற வில்லன் எனப் பெயரெடுப்பதுதான். ஆனால், ‘வெக்டர்’ என்பவன் எகிப்தின் பெரிய பிரமிடான கிசாவைத் திருடி விடுகிறான். அதைக் காரணம் காட்டி, ‘எவில் வங்கி (Bank of Evil)’-இல் நமது நாயகரான க்ரூவுக்கு லோன் தர மறுக்கின்றனர். ...