Shadow

Tag: Detective movies

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

மாய தோட்டா – தி புல்லட் வேனிஷஸ்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
(க்சியா ஷி டி சி டென் - The bullet vanishes (2012))   சீனாவின் ஷாங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களைத் திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான். முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பைச் சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்தப் பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்தத் துப்பாக்கி என்னைத் தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்தப் பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கிய...