
டைனோசர்ஸ் விமர்சனம்
படத்தின் பெயரைப் போலவே படக்கதையும் மிகப் பெரியது. ஒரு வரிக்குள் இதன் கதையை அடக்கவே முடியாது. டைனோசர்ஸ் எப்படி ஒரு புரியாத புதிரோ அப்படித்தான் டைனோசர்ஸ் (Die No Sirs) படத்தின் கதையும். நாயகன் மண்ணு-விற்கு ஒரு கதை, துரைக்கு ஒரு கதை, சாலயார்-க்கு ஒரு கதை, கிளியப்பனுக்கு ஒரு கதை, நாயகன் மண்ணுவின் அண்ணனுக்கு ஒரு கதை, நாயகி தீபாவுக்கு ஒரு கதை, மத்தியச் சிறையில் இருந்து வெளியான கைதிக்கு ஒரு கதை, இது போதாதென்று மண்ணு-வின் அப்பா, அம்மா, சாலயார், கிளியப்பன் இவர்களுக்கு ஒரு கதை. இந்தக் கதைகள் ஒன்றோடு ஒன்று ஒட்டவே இல்லை என்பது தனிக்கதை.
கிளியப்பன், சாலயார் என இரண்டு குழுவிற்கும் பகை. இதிலெல்லாம் தலையிடாமல் நாயகன் மண்ணு, அவன் அண்ணன் பழனி, அவர்களின் அம்மா மூவரும் வாழ்கிறார்கள். பழனியின் நெருக்கமான நண்பன் துரை சாலயாரின் கையாள். கல்யாணம் ஆகி பத்தே நாளில் கொலை வழக்கில் ஜெயிலுக்குச் செல்ல வேண்டிய சூழல் வர,...