Shadow

Tag: Director Arun Prabu Purushothaman

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

இது புதிது, சினிமா, திரைத் துளி
விஜய் ஆண்டனி நடிப்பில் 25 ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கும் ‘சக்தித் திருகன்’ எனும் படம், மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரது முந்தைய படங்களான அருவி மற்றும் ‘வாழ்‘ ஆகும். அவரது மூன்றாவது படமான ‘சக்தித் திருமகன்’ ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகவுள்ளது. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள். தொழில்நுட்பக் கலைஞர்கள்:-எழுத்து இயக்கம் - அருண் பிரபு ஒளிப்பதிவு - ஷெல்லி காலிஸ்ட் இசை - விஜய் ஆண்டனி படத்தொகுப்பு - ரேமண்ட் ...
அருவி விமர்சனம்

அருவி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
அருவியில் நனைவது போல் சிலர்ப்பூட்டும் விஷயம் வேறு ஏதேனும் உண்டா? அதன் அழகில் மயங்கி, கீழ் நோக்கிப் பாய்ச்சலாய் எழும் அதன் வேகத்தில் தலையை நுழைப்பது விவரிக்க இயலா ஆனந்தத்தைத் தந்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் மூச்சு முட்டத் தொடங்கிவிடும். சில நொடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் மீண்டும் அருவியில் கரைவது குதூகலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். இப்படமும் அத்தகைய உணர்வுகளையே ஏற்படுத்துகிறது. அருவி எனும் இளம்பெண்ணின் வாழ்க்கை, அதன் பாதையில் இருந்து விலக நேர்கிறது. எங்கோ தொடங்கி எப்படியோ முடிகிறது அருவியின் வாழ்க்கை. ஜீ டி.வி.யின் 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியைச் ’சொல்வதெல்லாம் சத்தியம்’ எனச் சகட்டுமேனிக்குக் கிண்டல் செய்துள்ளனர். மீம்ஸ் யுக மேம்போக்கான கிண்டல் இல்லை. அவர்கள் தரப்பு சங்கடங்களையும் பதிந்துள்ளது சிறப்பு. ஒவ்வொரு எபிசோடையும் பிளான் செய்ய, ஆட்களை ஒருங்கிணைக்க, தொகுப்பாள...