Shadow

சக்தித் திருமகன் | விஜய் ஆண்டனியின் 25 ஆவது படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் 25 ஆவது திரைப்படமாக வெளியாக இருக்கும் ‘சக்தித் திருகன்’ எனும் படம், மாஸ் ஆக்‌ஷன் ஃபேமிலி என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர். இயக்குநர் அருண் பிரபு இப்படத்தை இயக்கவிருக்கிறார். இவரது முந்தைய படங்களான அருவி மற்றும் ‘வாழ்‘ ஆகும். அவரது மூன்றாவது படமான ‘சக்தித் திருமகன்’ ஆழமான கதையுடன் கூடிய ஆக்‌ஷன் மாஸ் படமாக உருவாகவுள்ளது. படத்தை விஜய் ஆண்டனி ஃபிலிம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்க, மீரா விஜய் ஆண்டனி வழங்குகிறார்.

விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், த்ருப்தி ரவீந்திரன் மற்றும் குழந்தை நடிகர் மாஸ்டர் கேசவ் ஆகிய திறமையான நடிகர்கள் குழு உடன் நடிக்கவிருக்கிறார்கள்.

தொழில்நுட்பக் கலைஞர்கள்:-

எழுத்து இயக்கம் – அருண் பிரபு
ஒளிப்பதிவு – ஷெல்லி காலிஸ்ட்
இசை – விஜய் ஆண்டனி
படத்தொகுப்பு – ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா
ஆக்‌ஷன் நடனம் – ராஜசேகர்

குடும்பம், ஆக்‌ஷன், மாஸ் மற்றும் உணர்வுகள் சூழ்ந்த கதையாக நிச்சயம் ‘சக்தித் திருமகன்‘ பார்வையாளர்களுக்கு நல்லதொரு திரை அனுபவத்தைக் கொடுக்கும். விஜய் ஆண்டனியின் 25 ஆவது திரைப்படமாக அவருடைய கேரியரிலும் முக்கியத்துவம் வாய்ந்த படமாக அமையும். தற்சமயம் படம் போஸ்ட் புரடெக்‌ஷனில் உள்ளது. படம் குறித்து கூடுதல் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.