Shadow

Tag: Director Pa.Ranjith

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

”திரைப்படங்களில் அரசியல் பேசினால் என்ன தவறு” –  “ப்ளூ ஸ்டார்” பட விழாவில் நடிகை கீர்த்தி பாண்டியன்

சினிமா, திரைச் செய்தி, திரைத் துளி
நீலம் புரொடெக்ஷன்ஸ்  சார்பாக இயக்குநர் பா.ரஞ்சித்  மற்றும்  லெமன் லீப் கிரியேஷன்ஸ்  சார்பாக  ஆர்.கணேஷ் மூர்த்தி  மற்றும்  ஜி.சவுந்தர்யா ஆகியோர்  இணைந்து  தயாரித்திருக்கும்  திரைப்படம்  ப்ளூ ஸ்டார்.  அசோக் செல்வன்,  சாந்தனு,  கீர்த்தி பாண்டியன்,  ப்ருத்வி,  பகவதி பெருமாள், இளங்கோ குமரவேல்,  லிசி ஆண்டனி,  திவ்யா துரைசாமி,  அருண் பாலாஜி மற்றும்  பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார்.  இப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வைத்து நடைபெற்றது. படத்தில் நடித்த நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய சினிமா கலைஞர்கள், பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். படத்தின் நாயகியான கீர்த்திப் பாண்டியன்  பேசும் போது, இப்படத்தின் பயணம் 2022ல் தொடங்கியது.  அமர்...
“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

“வலியுடன் நடித்த விக்ரம்” – பா.ரஞ்சித் | தங்கலான்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்க, இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் தங்கலான். இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற்றது. பிரமிப்பை ஏற்படுத்தும் தங்கலான் படத்தின் டீசர் மற்றும் மேக்கிங் வீடியோ திரையிடப்பட்டது. இயக்குநர் பா. ரஞ்சித், “டீசர் உங்களுக்குப் பிடித்திருக்கும் என நம்புகிறேன் நிறையப் பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். இது டீசர் வெளியீடு தான் இன்னும் பல மேடைகள் இருக்கிறது. இந்தப் படம் நாங்கள் நினைத்ததை விட பட்ஜெட் அதிகமாகி விட்டது, ஆனால் இன்று வரை அதைப் பற்றி ஒரு கேள்வி கூட ஞானவேல் சார் கேட்கவில்லை. அவருக்கு எனக்குமான உறவு 10 ஆண்டுகளுக்கு மேலா...
காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

காலா: ரெளடியா? தலைவரா? – ரஞ்சித்தின் அரசியல்

சினிமா
சுவர் அரசியலைக் கலாபூர்வமாக வழங்கிய ரஞ்சித் எங்கே போனார் என்று ஆச்சரியமாக இருக்கிறது. சமூக அறிவுடன் கூடிய கல்வியின் அவசியத்தைச் சொன்ன ரஞ்சித்தால் 'காலா'வில் எதையும் சொல்ல முடியவில்லை. சமூக ஆவேசத்தில் தன்னைத் தொலைத்துக் கொண்ட பரிதாபமான படைப்பாளியாய்த் தெரிகிறார். 'மனு பில்டர்ஸ்' எனப் பெயர் வைப்பதெல்லாம் சரி. ஆனால், அதெல்லாம் name dropping போல் உபயோகிப்படுகிறதே தவிர, காவி அரசியலைக் கழுவி ஊற்றும் குறியீடெல்லாம் இல்லை. இல்லவே இல்லை. படம் நெடுகேவும் காலாவை ஒரு காமெடியனாகவே அணுகுகிறார் ரஞ்சித். மகா பரிதாபம். ஓர் உதாரணத்துடன் பார்க்கலாம். காலா கூட்டத்தில் இருந்து ஆவேசமாக எழுந்து நடக்கும் பொழுது, ஒருவர் ஓடி வந்து அவருக்குக் குடை பிடிக்கிறார். ஆண்டானுக்குச் சாமரம் வீச வேண்டியது அடிமையின் பாக்கியம் என்ற மேட்டிமை எண்ணம் காலாவிற்கு உள்ளதாக ரஞ்சித் சித்தரிக்கிறாரா? காலா எனும் ரெளடியின் மீது மக்களுக்க...
நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

நீலம் புரொடக்சன்ஸின் ‘பரியேறும் பெருமாள்’

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் படத்தயாரிப்பு நிறுவனமான “நீலம் புரொடக்சன்ஸ்” தயாரித்திருக்கும் படம் பரியேறும் பெருமாள். இயக்குநர் ராம்-இன் இணை இயக்குநரான மாரி செல்வராஜ், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். 'தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலமாகவும், 'மறக்கவே நினைக்கிறேன்' தொடரின் மூலமாகவும் இலக்கிய உலகத்திலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரான மாரி செல்வராஜ் இயக்கும் முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். முழுக்க முழுக்க தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தில் தென் தமிழகக் கிராமங்களிலும் நகரங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் எளிய மக்களிடமும் நுணுக்கமாகப் பரவிக் கொண்டிருக்கும் பிரிவினை படிநிலைகளையும் அது உருவாக்கும் பெரும் தாக்கத்தையும் பற்றி உண்மைக்கு மிக அருகில் சென்று பேசுகிற படமாக இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. காதல...