லக்ஷ்மி விமர்சனம்
பிரபுதேவாவைக் கொண்டு ஒரு நடனப்படம் எடுத்தால் எப்படியிருக்கும் என்ற சிறு பொறி லக்ஷ்மியாக வளர்ந்துள்ளது.
லக்ஷ்மி எனும் சிறுமிக்கு நடனம் என்றால் உயிர். எங்கும் எப்பவும் நடனம். தனது அம்மாவிற்குத் தெரியாமல், மும்பையில் நடக்கும் நடனப்போட்டியில் கலந்து கொள்கிறாள். லக்ஷ்மியின் கனவு என்னாகிறது என்பதுதான் படத்தின் கதை.
படத்தின் கதாநாயகியாக சிறுமி தித்யா. பேருந்து நிறுத்தத்தில், சாலையில், குளியலறையில், பள்ளியில், பேருந்தில், டீக்கடையில் (Cafe'teria) என ஆடிக் கொண்டே இருக்கிறார். தெய்வத்திருமகளில் சாரா, தியாவில் வெரோனிகா என அவர் ஆடிஷனில் தேர்வாகும் சிறுவர்கள் அனைவரும் உள்ளத்தைக் கவர்பவர்கள். தித்யாவும் தனது நடனத்தால் கவர்கிறார். அவரது முகம் வடக்கத்தைய சாடையாக இருப்பதாலும், அழுத்தமற்ற திரைக்கதையாலும், 'நம்ம பொண்ணு' என்ற உணர்வு எழவில்லை. லக்ஷ்மி போட்டியில் ஜெயித்து விடுவாள் என்பது உள்ளங்கை நெல்லிக்...