Shadow

Tag: Dragon thirai vimarsanam

DRAGON விமர்சனம்

DRAGON விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
திரையரங்கில் பார்க்க வேண்டிய ஜாலியானதொரு படம். கெட்டவனாகப் பொறுக்கியாக இருந்தால்தான் கெத்து என கல்லூரியில் அரியர் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறான் D.ராகவன். அதன் பலனாக வாழ்க்கை அவனை எப்படிலாம் புரட்டுகிறது என்பதுதான் படத்தின் கதை. லவ் டுடே படத்திற்குப் பிறகு, மற்றுமொரு வெற்றிப்படத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் முதற்பாதியில் ஏகத்திற்கும் சிகரெட் பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஐடியில் இணைந்த பின், பசங்களிடம் ஒரு பளபளப்பும் மினுமினுப்பும் ஏற்படும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு, ஒளடி கார் வாங்கினாலும், உருப்படாமல் இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே அவரைக் காட்டுகின்றனர். நல்லவேளையாகப் புறத்தில் மட்டுமே அப்படி, அகத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றமே படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது. கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வழக்கமான படமாக மாறிவிடாமல் பட...