Shadow

Tag: Duck issue in Bigg Boss house

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ் 3: நாள் 58 – ‘நம்ம பிள்ளைங்க எல்லாம் பயங்கரம்!’ – பிரின்சிபல் சேரன்

பிக் பாஸ்
'தினமும் அடிஷனல் ஷீட் வாங்கி அனாலிஸிஸ் எழுதறேனே, ஒரு நாள் பிரேக் குடுங்க' என நான் கதறினது யாருக்குக் கேட்டதோ இல்லையோ, பிக் பாஸ்க்குக் கேட்டிருக்கும் போல! ஒளிபரப்பினாங்க பாருங்க ஒரு மொக்கை எபிசோட்டை!! 'அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்' பாடலுடன் தொடங்கியது நாள். அது என்ன மாதிரியான சிச்சுவேஷனுக்கு இருக்கற பாட்டு, அதைக் கொண்டு வந்து இங்கே போடவேண்டுமா? ஆனால் இந்த ஸ்கெட்ச் யாருக்கென்று தான் தெரியவில்லை. எல்லோரும் கிண்டர்கார்டன் குழந்தைகளாக மாறி ஒரு ஸ்கூல் டாஸ்க் ஆரம்பித்தது. பஸ்ஸர் அடித்ததிலிருந்து எல்லோரும் கதபாத்திரமாகவே மாறிவிட்டனர். சாண்டி, தர்ஷன், லாஸ், ஷெரின் 4 பேருமே நல்ல பெர்ஃபாமன்ஸ். சேரன் தான் பிரின்சிபல். உடம்பு சரியில்லையோ என்னவோ, ரொம்ப சோர்வாக இருந்தார். மேலும், இன்று என்ன ஏழரை நடக்கப் போகுதோ என்கிற பீதி அவர் கண்களில் தெரிந்தது. அவருக்கு ஒன்றும் பெரிய வேலை இல்லை.&nb...