எமக்குத் தொழில் ரொமான்ஸ் விமர்சனம்
லியோனாவைப் பார்த்த முதல் பார்வையிலேயே உமா சங்கர்க்குக் காதல் வந்து விடுகிறது. லியோனாவிற்கும் காதல் வந்துவிட, அவர்களுக்கு இடையேயான ரொமான்ஸும் ஊடலும்தான் படத்தின் கதை.
மீண்டுமொரு ஸ்டாக்கிங் (Stalking) படமாக இருக்குமோ என்ற எண்ணம் எழும்போது, உமாசங்கர் லியோவிடம் காதலைச் சொல்லி விடுகிறார். 'எனக்கு இது செட்டாகாது' என லியோ சொன்னதும், உமா சங்கர் நாயகியைத் தொந்தரவு செய்யவில்லை. மிகவும் ஆசுவாசமாக இருந்தது. நாயகியும் சட்டென காதலை உணரத் தொடங்கிவிடுவதால், அடுத்த படம் 'ரொமான்ஸ்'-இற்குள் போகுமென நினைத்தால், கடைசி வரை அதுக்குள் போகவே இல்லை. க்யூட்டாக வைக்க வேண்டுமெனத் தலைப்பை மிஸ் லீடிங்காக வைத்துள்ளனர்.
புரிதலில் ஒரு சின்ன பிரச்சனை, தன்னிடம் பொய் சொல்லி விட்டான் என்ற நாயகியின் கோபம்தான் படத்தின் மைய ஓட்டம். 112 நிமிட கால அளவு கொண்ட படம். திருப்பமோ, சுவாரசியமோ இல்லாமல் ஒரே நேர்க்கோட்டில் செல்லும் முதற்பா...