
எஸ்கேப் ரூம் விமர்சனம்
தலைப்பைக் கொண்டே படத்தின் கதையைச் சுலபமாக யூகித்துவிடலாம்.
ஜோ, பென், அமாண்டா, மைக், ஜேசன், டேனி ஆகிய ஆறு பேரையும் ஒரு வீட்டில் அடைத்து வைக்கின்றனர். அங்கு ஒரு க்ளூ கிடைக்கும். அதை உபயோகித்துத் தப்பித்துக் கொள்ளவேண்டும். இல்லையென்றால் மரணம் உறுதி. அதிலிருந்து எத்தனை பேர் எப்படித் தப்பித்தார்கள் என்பதுதான் படத்தின் கதை.
நெருப்பைக் கக்கும் ஓவனாக மாறும் அறை, உறைய வைக்கும் பனியைக் கொண்ட அறை, நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறை, விஷ வாயு பரவும் அறை, புத்தியைப் பேதலிக்க வைக்கும் அறை, ஆளை நசுக்கும் சுவர்கள் கொண்ட அறை எனப் படத்தில் வரும் ஒவ்வொரு அறையும் மரண பயத்தைக் காட்டுவன. குறிப்பாக நழுவும் தரைத்தளத்தைக் கொண்ட அறையின் கலை வேலைப்பாடு பிரமிக்க வைக்கும் நேர்த்தியும் அழகும் கொண்டது. அங்கு அனைத்துமே தலைகீழாக இருக்கும். மின்விசிறி தரையிலும், மேஜை நாற்காலிகள் அந்தரத்தில் தொங்கியவண்ணமும் இருக்கும். பனிவெள...