ஃபர்ஹானா விமர்சனம்
ஆஃபீஸ் ரூமில் இருந்து வகுப்பறைக்கு அறிக்கை வந்து, ஃபீஸ் கட்டாதவர்களின் பெயர் படிக்கப்பட்டுக் குற்றவாளிகள் போல் மாணவர்கள் எழுந்து நிற்க வைக்கப்படுவது என்பது மிகக் குரூரமான உளவியல் தாக்குதல். அத்தகைய தாக்குதல்களில் இருந்து தன் குழந்தைகளைப் பாதுகாக்க, ஃபர்ஹானா வேலைக்குச் செல்ல முடிவெடுக்கிறார். டீமானிடைசேஷன், ஜி.எஸ்.டி., கொரோனா கால ஊரடங்குகள் என வாழ்க்கை, குறிப்பாக சிறு தொழிலில் ஈடுபட்டோரை நிலைகுலைய வைத்துள்ளது. அப்படி, செருப்புக் கடை வைத்துள்ள ஃபர்ஹானாவின் தந்தைக்கும் வருமானத்தில் இழப்பு நேரிடுகிறது.
வங்கியின் பிபிஓ (BPO)-வில் வேலைக்குச் சேரும் ஃபர்ஹானாவிற்கு, ஓர் அவசரத் தேவைக்காகக் கூடுதல் பணம் தேவைப்படுகிறது. பொருளாதாரச் சுமையைச் சமாளிக்கும் பொருட்டு, ஊக்கத்தொகை அதிகம் கிடைக்கும், அலுவலகத்திற்குள்ளேயே இயங்கும் வேறொரு பிரிவிற்குப் பணிக்குச் செல்கிறார் ஃபார்ஹானா. தனிமையில் வாடுபவர்கள் நட்...