ஃபைட் க்ளப் விமர்சனம்
உப்புக்காற்றும் உறை மணலும் உறவாடும் வடசென்னைப் பகுதிகளை களமாக எடுத்துக் கொண்டு, அம்மக்களின் மனநிலையிலும் வாழ்க்கையிலும் ஒளிந்திருக்கும் இருவேறுவிதமான முரண்பட்ட வாழ்க்கை முறையை யதார்த்த அழகியலுடன் பேச முற்பட்டிருக்கிறது ஃபைட் கிளப்.
வடசென்னை என்றாலே கால்பந்தாட்டமும், கேரம் போர்டுகளும், ரெளடியிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் தானா? இதைத் தாண்டி அம்மக்களிடம் வாழ்க்கை மற்றும் வாழ்வியலுக்கான கூறுகள் ஏதுமே இல்லையா என்கின்ற கேள்வி எவ்வளவு நியாயமானதோ, அதே அளவிற்கு நியாயமானது, அங்கு ஏன் ரெளடிசமும், கேங்க் வார்களும், போதைப் பொருட்களும் வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சங்கள் ஆகின்றது என்பதும். இவற்றை மாற்ற அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன என்கின்ற கேள்விகளும் முக்கியமானவை.
வடசென்னை என்பது புரசைவாக்கத்தின் பின்புறமுள்ள அயனாவரத்தில் துவங்கி பெரம்...