ரங்கூன் விமர்சனம்
ரங்கூன் என்ற தலைப்பு இப்படத்திற்குப் பொருத்தமானதா என்பதே ஐயம்தான். ரங்கூன் என்ற நகரம் படத்தின் கதைக்குப் பெரிதும் உதவாததோடு, சில நிமிடங்களே படத்தில் வந்து போகிறது. நாயகனின் சொந்த கிராமம் கூட ரங்கூனில் இருந்து 90 கி.மீ.இலுள்ள ‘டேடயே’ என்றே காட்சிப்படுத்தியுள்ளனர்.
பர்மாவிலிருந்து சிறு வயதிலேயே அகதியாகச் சென்னைக்கு வரும் கெளதம் கார்த்திக்கிற்கு வாழ்க்கை அளிக்கும் படிப்பிணை தான் படத்தின் கதை.
கெளதம் கார்த்திக்கின் நண்பர் 'அத்தோ' குமாராக லல்லு கலக்கியுள்ளார். அவர் வடச்சென்னைத் தமிழில் வெகு சரளமாய்ப் பேசி ரசிக்க வைக்கிறார். வெங்கட் என்கிற வெங்கடேசனாக வருன் கெளதம் கார்த்திக்கைக் கூட வடச்சென்னைக்காரராக ஏற்றுக் கொள்ள முடிகிறது. அவ்வாறு கெளதமை முழுவதுமாக மாற்றியுள்ளார் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி. இதுவரையிலுமான கெளதம் கார்த்திக் நடிப்பில் வெளியான படங்களிலேயே, இப்படம்தான் குறிப்பிட்டுச் சொல்லும...