Shadow

Tag: Game Changer review

கேம் சேஞ்சர் விமர்சனம்

கேம் சேஞ்சர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஊழலுக்கு எதிரான நாயகன் எனும் ஷங்கரின் பழைய விளையாட்டில் எவ்வித மாற்றமும் இல்லாமல் அடித்து ஆடியுள்ளார் ராம் சரண். கெட்டதைக் கண்டால் கோபத்தில் பொங்கி எழும் ராம் நந்தனின் சீற்றத்தை ஆரோக்கியமான முறையில் மடைமாற்றி சமூகத்துக்கு நல்லது செய்யச் சொல்கிறாள் அவனது காதலி தீபிகா. படித்து ஐ.பி.எஸ். ஆகி, தொடர் முயற்சியில் ஐ.ஏ.எஸ். ஆகி கலெக்டராகி விடுகிறார் ராம். இறப்பதற்கு முன், ராம் நந்தனை அரசியல் வாரிசாக அறிவிக்கிறார் ஆந்திர முதல்வர் பொப்பிலி சத்யமூர்த்தி. முதல்வர் கனவில் இருக்கும் சத்யமூர்த்தியின் வளர்ப்பு மகன் பொப்பிலி மோபிதேவி, ராமை 'பாலிட்ரிக்ஸ்' செய்து கட்சியை விட்டு நீக்கி விடுகிறார். ராம் நந்தன் தேர்தல் ஆணையராகி விடுகிறார். இப்படி, காட்சிகள் கதையின் வேகத்தை விட துரிதமாக மாறிக் கொண்டே இருக்கிறது. முதல்வன் படத்தில், ஒருநாள் முதவராக அர்ஜுன் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகளை ஐ.பி.எஸ் அதிகாரியாகவும், ஐ...