Shadow

Tag: Gatta Kusthi movie

கட்டா குஸ்தி விமர்சனம்

கட்டா குஸ்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
கட்டா குஸ்தி என்பது கேரளாவின் பிரத்தியேக வகை மல்யுத்தமாகும். அக்கலையில் நிபுணத்துவம் பெற்ற கீர்த்திக்கு, மல்யுத்த வீராங்கனை என்பதால் மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. பொள்ளாச்சியைச் சேர்ந்த வீராவிடம், கீர்த்தி ஒரு மல்யுத்த வீராங்கனை என்பதை மறைத்துக் கல்யாணம் செய்து வைக்கிறார் கீர்த்தியின் சித்தப்பா கணேசன். கீர்த்தி பற்றிய உண்மை தெரிந்ததும் ஏற்படும் குழப்பமும் தெளிவும்தான் படத்தின் கதை. படத்தின் முதல் பாதி நகைச்சுவைக் காட்சிகள் மிகச் சிறப்பாக உள்ளன. கணவன் குறித்து நாயகியிடம் பெண்கள் கூறம் போதும், மனைவி குறித்து நாயகனிடம் கருணாஸ் கூறும் போதும், திரையரங்கில் சிரிப்பொலியைக் கேட்க முடிகிறது. இயக்குநர் செல்லா அய்யாவிற்கு நகைச்சுவை இயல்பாக வருகிறது. வசனத்தில் வரும் 'சின்னம்மா'வைக் கருணாஸைக் கலாய்த்திருப்பது ரசிக்க வைக்கிறது. இரண்டாம் பாதியில், சினிமா சுதந்திரத்தைக் கையிலெடுத்து, ஈகோவில...