Shadow

Tag: Gingee movie vimarsanam

செஞ்சி விமர்சனம்

செஞ்சி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
ஓர் ஓலைச்சுவடியில் கிடைக்கும் துப்பினைக் கொண்டு, மூவர் குழு ஒன்று, புதையலைத் தேடிச் செல்கிறது. செஞ்சியில் தொடங்கும் அந்தப் பயணம், மதுரை (கல் மலை), ராஜபாளையத்திலுள்ள இதய வடிவப்பாறை, தென்காசி எனப் பயணித்து கேரளாவின் கல்லார் (Kallar) மலைப்பகுதியில் முடிகிறது. புதையல் வேட்டையை மையமாகக் கொண்ட தமிழ்ப்படங்கள் அரிது. கணேஷ் சந்திரசேகர், ரஷ்ய நடிகை கெசன்யா மற்றும் பலர் நடித்துள்ள படம். கதையை எழுதிப் படத்தைத் தயாரித்து இயக்கியதோடு நடித்தும் உள்ளார் கணேஷ் சந்திரசேகர். ஏலியன் பிக்சர்ஸ் சார்பில் இந்தப் படம் உருவாகி உள்ளது. ஆக்சன் ரியாக்சன் வெளியிடுகிறது. பிரான்சிலிருந்து பாண்டிச்சேரிக்கு வரும் சோஃபியா தனது மூதாதையர் வீட்டை அடைகிறாள். அங்கே நிலவறையில் பழைய புராதனக் கலைப்பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன. அங்கே ஏதோ ஓர் அமானுஷ்யத்தை உணரும் சோஃபியா, ஓர் ஓலைச்சுவடியைக் கண்டெடுக்கிறாள். அதைத் தொல்பொருள் ஆராய்...