Shadow

Tag: Godhi Banna Sadharana Mykattu

60 வயது மாநிறம் விமர்சனம்

60 வயது மாநிறம் விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
'கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (Godhi Banana Sadharna Mykattu)' என்ற படம் கன்னடத்தில், 2016 இல் வெளிவந்தது. 'கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு' என்பது அந்தக் கன்னடப்படத் தலைப்பின் பொருள். இயக்குநர் ராதாமோகன், '60 வயது மாநிறம்' எனத் தமிழில் மீள் உருவாக்கம் செய்துள்ளார். அல்சைமர் நோயால் பாதிக்கப்படும் 60 வயது கோவிந்தராஜ் காணாமல் போய்விடுகிறார். அவரையொரு பராமரிப்பு இல்லத்தில் சேர்த்துவிட்டிருக்கும் அவரது மகன் சிவா, தனது அலட்சியத்தால் தந்தையைத் தொலைத்துவிட்டோமெனத் தேடி அலைகிறான். சிவாவின் தந்தை எங்குப் போனார், எப்படிக் கிடைத்தார் என்பதுதான் படத்தின் கதை. ராதாமோகன் மீண்டும் ஒருமுறை தன் மேஜிக்கை நிகழ்த்திக் காட்டியுள்ளார். ராதாமோகனின் ஆஸ்தான நடிகரான குமரவேல் அறிமுகமான நொடி முதல் படம் கலகலப்பாகிறது. கொலைக்காரர்களான சமுத்திரக்கனியிடமும், அவரது அசிஸ்டென்ட்டிடமும் மாட்டிக் கொள்ளும் குமரவேலின் கவுன்ட்ட...
முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

முதல் முறையாக ஒரு கன்னடப் படம்

சினிமா, திரைத் துளி
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் நினைவு விருது என்பது, கொல்லபுடி ஸ்ரீநிவாஸ் அவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் வழங்கப்படும் ஒரு விருது. தன் முதல் படட் இயக்கிக் கொண்டிருக்கும் பொழுது விபத்தொன்றில் இறந்துவிட்டார் கொல்லப்படி ஸ்ரீநிவாஸ். அவர் நினைவாக அவரது குடும்பத்தினர், ஒரு திரைப்படத்தைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுக்கும் ஓர் அறிமுக இயக்குநருக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் விருது வழ்ங்குகின்றனர். அப்படம், இந்திய மொழிப் படங்களில் எந்த மொழியிலும் இருக்கலாம். இந்த வருடம் அந்த விருது, ஹேமந்த் எம். ராவ் இயக்கிய, ‘கோதி பண்ணா சாதார்ணா மைக்கட்டு (கோதுமை நிறம் சாதாரண உடற்கட்டு)’ என்கிற கன்னடப் படத்திற்குக் கிடைத்துள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, அசாமீஸ், மணிப்பூரி என பல்வேறு மொழியில், மொத்தம் 20 படங்களில் இருந்து இப்படம் தேரெந்தெடுக்கப்பட்டள்ளது. அல்சீமர்ஸ் நோயால் காணாமல் போகும் தந்தையைத் தேடுவதாக இப்படத்தின்...