Shadow

Tag: Gurumoorthy movie

குருமூர்த்தி விமர்சனம்

குருமூர்த்தி விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தனது ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் குற்றமே நிகழக்கூடாதென முறுக்கிக் கொண்டு திரியும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி. அவர் நீலகிரிக்கு மாற்றலாகிச் செல்ல, தொழிலதிபர் கந்தசாமியின் 5 கோடி அடங்கிய பணப்பெட்டி திருடப்படுகிறது. கறாரான குருமூர்த்தி அப்பணப்பெட்டியைக் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின்கதை. தொழிலதிபர் கந்தசாமியாக ராம்கி நடித்துள்ளார். ஓர் இடைவேளைக்குப் பின் நடித்துள்ளதால், கதைத் தேர்வில் கவனம் செலுத்தியிருப்பார் என்ற எதிர்பார்ப்பைப் பூர்த்திச் செய்யத் தவறியுள்ளார். ஆசைநாயகிக்கு வீடு வாங்கித் தர, அவர் எடுத்துச் செல்லும் கறுப்புப் பணத்தினைத் தொலைத்துவிடுகிறார். பின், பாதி படத்திற்கு மேல் கொஞ்சம் நேரம் ஆன்மாவாகவும் போலீஸ் ஜீப்பில் பயணிக்கிறார். ஜக்கம்மா தேவியின் ஆணையாகக் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர் பாத்திரத்தில் ஜார்ஜ் மரியான் நடித்துள்ளார். போலீஸ், புலனாய்வு என்ற படத்திற்கு ஓர்...