Shadow

Tag: GV Prakash about Thangalan music

“தங்கலான் | பழங்குடி மக்களின் இசை” – ஜி.வி.பிரகாஷ் குமார்

“தங்கலான் | பழங்குடி மக்களின் இசை” – ஜி.வி.பிரகாஷ் குமார்

இது புதிது, சினிமா, திரைச் செய்தி
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம், நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. இசையமைப்பாளர் ஜீ.‌ வி பிரகாஷ், ''இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌ பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்க...