Shadow

Tag: Harry MacLure

The Indian In Me விமர்சனம்

The Indian In Me விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
இது, 28 நிமிடங்கள் கால அளவு கொண்ட ஓர் ஆங்கிலோ-இந்தியக் குறும்படமாகும். மரணப்படுக்கையில் இருக்கும் ரிச்சர்ட் எனும் ஆங்கிலோ-இந்தியர், தனது பேரனின் இந்திய மனைவியான சாந்தியிடம் மன்னிப்பு கேட்கிறார். சாந்தி பதறிப் போய், 'ஏன் பப்பா? நீங்க என்னிடம் எப்பவும் அன்பாகத்தானே நடந்துக்கிட்டீங்க?' எனக் கேட்கிறார். தன்னை எப்பொழுதும் பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தின் பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கருதும் ரிச்சர்ட், "அது என் குற்றவுணர்ச்சியால் அப்படி நடந்து கொண்டேன்" என்கிறார் எண்பது வயது ரிச்சர்ட்.இந்தக் கதையில், ரிச்சர்ட், ஆஸ்திரேலியாவில் வாழும் அவரது மூத்த மகன் ஃப்ரெடி, இளைய மகன் பீட்டர், பீட்டரின் மனைவி சார்மைன் வால்டர்ஸ், பீட்டரின் மகனும் - ரிச்சர்டின் பேரன் மார்க், மார்க்கின் மனைவி சாந்தி என பிரதான பாத்திரங்கள் அறுவர்தான். அனைவருமே உருவகங்களாகப் (Metaphor) பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலியா...
Calcutta, I’m sorry விமர்சனம்

Calcutta, I’m sorry விமர்சனம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
சீராகச் செல்லும் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஓர் உலுக்கும் சம்பவம் ஏற்படும் வரை, நாம் வாழும் வாழ்வின் பொருளென்ன என்ற தத்துவார்த்த கேள்விக்குள் மனிதன் செல்லுவதில்லை. வாழப் போகும் நாட்கள் குறைவென்று நிச்சயமான பின், இருக்கும் நாட்களுக்குள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள வேண்டித் துடிக்கிறான். அச்சமயத்தில், சரி, தவறு என மனம் போட்டு வைத்துள்ள எல்லாக் கணக்குகளும் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்ட மனம் இளகுகிறது. கடைசி நொடி வரையும் இளகாமல் வாழ்ந்து மடிவோர் உண்டு என்ற போதிலும், மனம் இளகுவோரின் அகப்பயணம் எவ்வாறாக இருக்கும் என்பதே இந்த ஆங்கிலப் படத்தின் மையக்கரு.  குன்னூரில் இசை ஆசிரியராகப் பணி புரிபவர் அமாண்டா ரைட். கணவரையும் மகளையும் பிரிந்து இசையே வாழ்க்கையென வாழும் ஆங்கிலோ இந்தியரான அமாண்டாவிற்கு தண்டுவட மரப்பு நோய் (Multiple Sclerosis) கண்டறியப்படுகிறது. வாழ்வின் நிலையாமையையும், விர...