
“மனம் திறந்த உரையாடலுக்கு அழைப்பு” – கமல் ஹாசன்
மேற்கு ஆசியாவில் நீடித்து வரும் போரினால் உலகம் முழுக்க நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிசக்தி, வணிகம், போக்குவரத்து, ஏற்றுமதி இறக்குமதி ஆகியவற்றின் மீது அழுத்தம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதன் தாக்கத்தை இந்தியாவும் எதிர்கொண்டு வருகிறது.
அதிகரித்து வரும் தயாரிப்புச் செலவுகள், நிச்சயமற்ற வருமானம் என இந்தியத் திரைப்படத்துறை ஏற்கெனவே தத்தளித்துக் கொண்டிருக்கையில் இப்படியொரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பொருளாதார மந்த நிலையும், பண வீக்கமும், வேலை இழப்புகளும் உருவாக்கும் அழுத்தங்கள் காரணமாக வரவிருக்கும் மாதங்களில் மக்கள் பொழுதுபோக்குக்காகச் செலவிடும் விதங்களும் மாறக்கூடும்.
இந்தச் சுமை தயாரிப்பாளர்கள், திரையரங்குகள், வினியோகஸ்தர்கள், பைனான்சியர்கள், திரைக்கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் என ஒட்டுமொத்தத் திரையுலகின் மீது விழும்.
சினிமா தொடர்ந்து வளர வேண்டுமானால், செலவழிக்கப்படு...

