Shadow

Tag: I am Game thirai vimarsanam in Tamil

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

ஐ ஆம் கேம் | I’m Game விமர்சனம்

அயல் சினிமா, இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
பெரிய முதலீட்டில் இப்படத்தைத் தயாரித்துள்ளார் துல்கர் சல்மான். சூதாட்டத்தில் தன் வயமிழுக்கும் டேன் ஜானிற்கு விபத்து நேரிட்டு வலது கையை இழக்க வேண்டி வருகிறது. அவருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்து ஒரு நன்கொடையாளரின் கையைப் பொருத்துகின்றனர். அந்தக் கை, ஒரு தனி உயிர் போல் தன்னிச்சையாக இயங்க ஆரம்பிக்கிறது. டேன் ஜானைத் தான் இழுத்த இழுப்பிற்கு அலைக்கழிக்கிறது. முத்தாய்ப்பாக, டேவிட் ஆப்ரஹாம் எனும் பெரும் தொழிலதிபரைக் கொலை செய்யவும், அந்தக் கை துணிகிறது. தன்னை மீறி இயங்கும் ஒரு கைக்காகக் கொலைப்பழியைச் சுமக்க முடியாது என டேன் ஜான் மருத்துவர்களிடம் கெஞ்சுகிறாண். கையாவது, தனித்துச் செயற்படுவாவது, கொலை செய்ய நினைப்பதாவது என டேன் ஜானை யாரும் நம்ப மறுக்கின்றனர். அந்தக் கைக்கும், டேவிட் ஆப்ரஹாமிற்கும் என்ன பகைமை, அப்பகைமையில் சிக்கிக் கொள்ளும் டேன் ஜான் எப்படி அதை எதிர்கொள்கிறார் என்பதே படத்தின் முடிவு....