Shadow

Tag: IFFK Diaries

1982 – லெபனான் திரைப்படம்

1982 – லெபனான் திரைப்படம்

அயல் சினிமா, சினிமா, திரை விமர்சனம்
ஜூன் 1982. விஸாம் எனும் பள்ளி மாணவன், எப்படியாவது தன் காதலை ஜோனாவிடம் சொல்லி விடவேண்டுமென நினைக்கின்றான். ஆனால், அச்சமயம் பலத்த வெடிச்சத்தம் கேட்கிறது. எல்லாமே தலைக்கீழாய் மாறுகிறது. லெபனான் இளைஞர்கள் இராணுவத்தில் பெருமளவு சேர, லெபனான் மண்ணில் இஸ்ரேலும் சிரியாவும் மோதிக் கொள்கின்றன. பெரும்பாலான போர் படங்கள், குறிப்பாக அமெரிக்கத் திரைப்படங்கள், தங்கள் படை எப்படி போரில் வெற்றி ஈட்டியது என்பது பற்றியதாகவே இருக்கும். ‘தி பியானிஸ்ட்’ போன்ற வெகு சில விதிவிலக்குகளும் உண்டு. இதற்கு மாறாக ஐரோப்பியத் திரைப்படங்களோ, போரினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பினைப் பற்றித் தொடர்ந்து பேசி வருகின்றன. அவ்வகையில் மத்திய கிழக்கு நாடான லெபனானின் இயக்குநர்களும், போரின் பாதிப்பைப் பற்றிய உணர்ச்சிபூர்வமான படத்தை உருவாக்கி வருகிறார்கள். ‘கேப்பர்னாம் (Capernaum)’ என்ற அற்புதமான லெபனான் படம் ஒரு சிறந்த எடுத்து...