Shadow

Tag: Ilango Kumaravel

Blue Star விமர்சனம்

Blue Star விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
மற்றுமொரு ஆடுகளத்தின் கதை.  ஊரில் இரண்டு கிரிக்கெட் அணிகள். அவர்களிடையே ஜாதி ரீதியிலான பிளவு. இரண்டு அணிகளும் முட்டிக் கொண்டும் முறைத்துக் கொண்டும் திரிய, வர்க்கம் அவர்கள் இருவரையுமே இன்னும் கீழாகத்தான் பார்க்கிறது என்கின்ற உண்மை ஒரு கட்டத்தில் முகத்தில் அறைய, இரு அணிகளும் கைகோர்த்து வர்க்கத்தை ஜெயிப்பதே இந்த “ப்ளூ ஸ்டார்” படத்தின் கதை. படத்தின் துவக்கம் மிக மெதுவாகச் செல்கிறது. கதையற்ற காட்சிகளின் கோர்வையாக மட்டுமே கிட்டத்தட்ட பத்து நிமிடங்கள் வரை நீடிக்கும் படம், காலணி அணியினருக்கும், ஊர்க்கார அணியினருக்குமான 3 பால் மேட்சில் தான் சூடுபிடிக்க ஆரம்பிக்கிறது.  அதற்குப் பின்னர் விளையாட்டை மையமாகக் கொண்ட திரைப்படங்களின் விதிகளுக்கு உட்பட்டு நகரும் திரைக்கதை, விளையாட்டுக்கே உண்டான சுவாரசியத்தைத் தக்க வைத்துக் கொள்வதால் திரைப்படம் பரபரப்பாகச் செல்கிறது.  க்ளைமாக்ஸ் காட்சியில் பி...
கேப்டன் மில்லர் விமர்சனம் :

கேப்டன் மில்லர் விமர்சனம் :

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
’முன்னாடி நம்ம நாட்டுக்காரனுக்கு கீழ அடிமையா இருந்தோம்… இப்ப வெளிநாட்டுக்காரன் கீழ அடிமையா இருக்கோம்… யார் கீழ இருந்தா என்ன…? எல்லாம் அடிமைதான… இவன் என்னை செருப்பு போடாதங்குறான்… கோயிலுக்குள்ள வராதங்குறான்… அவன் என் காலுக்கு பூட்ஸ் குடுக்குறான்.. மருவாதியான வாழ்க்கை வாழணும்னு ஆசப்படுறேன்… நான் பட்டாளத்துக்கு போறேன்…” என்று ஆங்கிலேயரின் சிப்பாயாக பணிக்குச் சேரும் அனலீசன் என்கின்ர ஈசா, மில்லர் என்கின்ற பெயர் மாற்றத்துடன் துப்பாக்கி ஏந்த அவனுக்கு சுதந்திரப் போராட்ட வீரர்களை சுட்டுக் கொல்லும் பணி கொடுக்கப்படுகிறது. அதை செய்ய முடியாதவனாக மனம் மாறி சுதந்திரப் போராட்ட வீரர்களை நோக்கி பிடிக்க வேண்டிய துப்பாக்கியை வெள்ளையனின் ராணுவ வீரர்களை நோக்கியும் தளபதியையும் நோக்கியும் திருப்பினால்” என்ன நடக்கும் என்பதை கற்பனையாக பேசி இருக்கும் திரைப்படம் தான் “கேப்டன் மில்லர்”. இயக்குநர் அருண் மாதேஸ்வரனின்...