Shadow

Tag: Irandam ulaga porin kadaisi gundu movie

இரும்புக் கடையின் நீல இசை

இரும்புக் கடையின் நீல இசை

சினிமா, திரை விமர்சனம்
இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பு “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு”. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் மாரிசெல்வராஜ் பேசியதாவது, "நீலம் புரொடக்சன் இந்த மாதிரி நிகழ்வுகளை நடத்திக் கொண்டே இருக்க வேண்டும். எப்படி ஒரு மாடு மேய்க்கிறவனைக் கொண்டுவந்து 'பரியேறும் பெருமாள்' படத்தை இயக்க வைத்தாரோ, அதே போல் இரும்புக் கடையில் வேலை பார்க்கும் ஒருவரை இப்போது "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" படத்தை இயக்க வைத்துள்ளார் அண்ணன் பா.ரஞ்சித். தோழர் அதியன் அவர்களின் அரசியல் எனக்கு மிகவும் பிடிக்கும். 'இப்படியான ஒருவர் படமெடுத்தால் எப்படி இருக்கும்?' என்ற ஆசை எனக்குள் இருந்தது. இப்படத்தை எதைக்கொண்டு தடுத்தாலும் இப்படம் அடைய இலக்கை அடைந்தே தீரும்" என்றார் நடிகை ஆனந்தி, "ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீலம் புரொடக்சன் என் சொ...
45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

சினிமா, திரைத் துளி
இயக்குநர் பா.இரஞ்சித்தின் 'நீலம் புரொடக்‌ஷன்ஸ்' தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”. தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார். அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களைச் சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்குத் தோளாக நின்று படத்தினைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரைப் பாராட்டித் தள்ளினார். “...