32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

45 நாட்கள் 40 லொக்கேஷன் – ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார்

Dinesh R சேலம் Published: 08/08/2019 1 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

dop-kishore-kumar

இயக்குநர் பா.இரஞ்சித்தின் ‘நீலம் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிக்கும் இரண்டாவது படம் “இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு”.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

தினேஷ், ஆனந்தி, ரித்விகா, லிஜீஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தினை பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அதியன் ஆதிரை இயக்கி இருக்கிறார். கலை இயக்குநராக த.ராமலிங்கம் பணிபுரிந்திருக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் பணியாற்றி இருக்கிறார்.

அறிமுகமாகும் முதல் படத்திலேயே பல சவால்களைச் சந்தித்து, இயக்குநருக்கான ஒளிப்பதிவாளர் என்கிற நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறார். திட்டமிடப்பட்டபடி 45 நாட்களில் 40 லொகேஷன்களில் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டிய சவாலை ஏற்று, இயக்குநரோடு தோளுக்குத் தோளாக நின்று படத்தினைக் குறித்த நேரத்தில் முடிப்பதற்குப் பக்கபலமாக இருந்திருக்கிறார்.

இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்த இயக்குநர் அதியன் ஆதிரை, கிஷோர் குமாரைப் பாராட்டித் தள்ளினார். “நிச்சயமாக இது ஒரு கடினமான பயணம்தான் எங்களுக்கு. 45 நாட்களில் 40 லொகேஷன் எனத் திட்டமிடும் போது மனதிற்குள் ஒரு அச்சம் இருந்தது. ஆனால் அந்த அச்சத்தைப் போக்கி, திட்டமிட்டபடி முடிப்பதற்கு கிஷோர் கடுமையாக உழைத்தார்” என்று கூறினார்.

அறிமுகமான படம் வெளியாகும் முன்பே பாராட்டுகளைப் பெற்று வரும் ஒளிப்பதிவாளர் கிஷோர் குமார், மெட்ராஸ், கபாலி, காலா படங்களின் ஒளிப்பதிவாளரான முரளியின் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.