Shadow

Tag: Jallikattu

இளமி விமர்சனம்

இளமி விமர்சனம்

சினிமா, திரை விமர்சனம்
எளிமையான மனிதர்களின் காதல், தியாகம், வீரம் ஆகியவற்றை மதித்துப் போற்றும் வகையில் அவர்களை சிறு தெய்வங்களாக்கி வழிபடுவது நம் மண்ணின் மரபு. அப்படி 18 ஆம் நூற்றாண்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மாங்குளத்தைச் சேர்ந்த வேட்டைக்காரனான கருப்புக்கும், கிளியூரைச் சேர்ந்த இளமிக்கும் இடையில் காதல் மலர்கிறது. ஆனால், இளமியின் தந்தையான வீரைய்யனோ, தனது வடம் ஜல்லிக்கட்டு மாட்டை அடக்குபவர்களுக்கே தன் மகளென ஊர்ப் பிரச்சனையொன்றின் பொழுது வாக்கு கொடுத்துவிடுகிறார். இளமி - கருப்பு இணையின் காதல் என்னானது என்பதே படத்தின் கதை. ஜல்லிக்கட்டின் மேன்மையைப் பற்றிப் பேசும் காட்சிகளோடு படம் தொடங்குகிறது. ஜல்லிக்கட்டு தமிழர்களுக்கு விளையாட்டல்ல, அது வீரம்; தமிழர்கள் தன் மானத்தை மாடுகளின் மீது இறக்கி வைத்தனர்; மாடு அணைபவனுக்கே பெண் என வசனங்கள் உள்ளன. மேலும், ஜல்லிக்கட்டின் வகைகளைப்...