Shadow

Tag: Japer movie

ஜாஸ்பர் விமர்சனம்

ஜாஸ்பர் விமர்சனம்

இது புதிது, சினிமா, திரை விமர்சனம்
தமிழில் வந்திருக்கும் முதல் ஹிட்மேன் படமென பட நிறுவனம் விளம்பரப்படுத்தியுள்ளனர். அடிதடி என வாழும் ஜாஸ்பர், போலீஸ்க்கு உதவும் ஒரு ஹிட்மேனாக உருமாறி வேட்டையாடுகிறான். அவன் குடும்பத்தை இழந்ததும் அனைத்தையுன் விட்டுத் தலைமறைவாகி விடுகிறான். ஜாஸ்பர் கிழப்பருவம் எய்தி முதுமையை அடையும் தருவாயில் உள்ள பொழுது, அவனது பக்கத்து வீட்டிலுள்ள இளைஞன் கடத்தப்படுகிறான். அந்த இளைஞனை மீட்க மீண்டும் ஹிட்மேனாக மாறுகிறான் ஜாஸ்பர். குடித்துக் குடித்து தன்னைச் சீரழித்துக் கொள்ளும் ஜாஸ்பரால், பக்கத்து வீட்டு இளைஞனைக் கண்டுபிடித்துக் காப்பாற்ற முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை. ஹிட்மேனின் அறிமுகம் ஒரு தோப்பில் நிகழ்கிறது. படத்தின் கதைக்களம் மிகவும் பெரியது. ஆனால், படத்தின் பட்ஜெட் காரணமாக எல்லாம் மிக எளிமையாக நிகழ்கின்றன. மிஸ்டர் ஜே எனும் ஹிட்மேன்க்கு அதிசய சக்திகள் உள்ளதாக வதந்தியும் பயமும் மக்களிடையே எழுகிறது. ...