
பாகமதி விமர்சனம்
அருந்ததீ அனுஷ்காவை மனதில் கொண்டு பாகமதி உருவாக்கப்பட்டிருக்கிறாள்.
ஓர் அமைச்சரின் மீது பழி போட, அவரது பெர்ஸனல் செகரெட்டரியும், கொலைக் குற்றவாளியுமான ஐ.ஏ.எஸ். அனுஷ்காவை விசாரணைக்காகப் பாகமதிக் கோட்டையில் அடைக்கின்றனர். அக்கோட்டையில், இரவில் அமானுஷ்யமான சம்பவங்கள் நடைபெறுகின்றன. அக்கோட்டையின் அமானுஷ்ய அச்சுறுத்தல்களில் இருந்தும், விசாரணையில் இருந்தும் பாகமதி எப்படித் தப்பினார் என்பது தான் படத்தின் கதை.
படம் ஒரு பொலிட்டிக்கல் த்ரில்லர்.
மிகவும் நல்லவரான அமைச்சர் ஜெயராமை எந்த வழக்கிலாவது சிக்க வைக்க வேண்டுமென சி.பி.ஐ. முடுக்கி விடப்படுகிறது. 'பவர் பாலிடிக்ஸ்' என்றால் என்னவென்றும், அது எப்படி அதிகார வர்க்கத்திற்குச் சாத்தியமாகிறது என்பதையும் படம் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.
அனுஷ்கா வழக்கம் போல் அசத்தியுள்ளார். அவருக்காகவே உருவாக்கப்பட்டிருக்கும் கதாபாத்திரம் அல்லவா? ஆனால், ஃப்ளாஷ்பே...