
மேரி க்வீன் ஆஃப் ஸ்காட்ஸ் விமர்சனம்
'Queen of Scots: The True Life of Mary Stuart' என்ற ஜான் கை-யின் (John Guy) புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட வரலாற்றுப்படம் இது.
15 வது வயதில் கல்யாணமாகி, 16 வது வயதில் தாய்நாடான ஃபிராண்ஸின் மகாராணியாகி, 18 வயதில் விதவையாகி, மறுமணம் செய்து கொள்ள விரும்பாமல் தனது தந்தை நாட்டிற்குத் திரும்பி, ஸ்காட்லாந்தின் ராணியாகப் பதவியேற்கிறார் மேரி ஸ்டூவர்ட். அவரது சகோதரி முறையுடைய மணமாகாத எலிசபெத் I, இங்கிலாந்தின் ராணியாக உள்ளார். மேரியின் வரவால், எலிசபெத்தின் அரியணைக்கு ஆபத்து வரலாமென எச்சரிக்கப்படுகிறார். ஏனெனில் மேரிக்கும் அதற்கான உரிமையுண்டு.
கத்தோலிக்கப் பிரிவைச் சேர்ந்த மேரியை, ஸ்காட்லாந்து ப்ரொடஸ்டன்ட்ஸ் ராணியாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மேலும், ஒரு பெண் ஆள்வதா என்றும் உள்ளுக்குள் புகைச்சலோடு உள்ளனர் ஆண்கள். எனவே மேரிக்கு எதிராக உள்நாட்டில் தொடர்ந்து கலகங்களை உருவாக்கி வருகிறார...