
ஜோசஃப் – விமர்சனம்
இந்தப் படம், கடந்த நான்கைந்து வருடங்களில் நான் பார்த்த மிகச் சிறந்த க்ரைம் த்ரில்லர் படம். இந்தப் படத்தில் இரண்டு லேயர்கள் உள்ளன. ஒன்று க்ரைம் இன்வெஸ்டிகேஷன். மற்றொன்று மிக எமோஷனலான குடும்ப உறவுகள் மீதான சென்ட்டிமென்ட். இரண்டையும் சிறப்பாக பேலன்ஸ் செய்து நல்ல காட்சி அனுபவத்தை அளிக்கிறது ஜோசஃப்.
ஜோசஃப், ரிடையர்ட் போலீஸ் அதிகாரி. அவரது இன்வெஸ்டிகேஷன் திறமைக்காக அவரைத் தொடந்து போலீஸ் டிபார்ட்மென்ட் பயன்படுத்தி வருகிறது. முதல் காட்சியில் மிக அநாயாசமாக அந்த வயதான தம்பதியர் கொலையில் கொலைகாரன் யார் என துப்பறியும் காட்சியும் அதற்கான லாஜிக்கும் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது.
ஜோஃசப்க்கு ஒரு தொந்தரவு செய்யும் ஃப்ளாஷ்பேக் இருக்கிறது. அவர் போலீஸ் டிபார்ட்மென்ட்டில் சேருவதற்கு முன் அவரது ஊரில் ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். பெண் வீட்டில், இவர் வேலை இல்லாதவர் என்பதால் இவருக்குப் பெண் தர மறுக்கிறார்கள்...