ஜூலை காற்றில் விமர்சனம்
"உன்னாலே உன்னாலே" படத்தில், 'ஜூன் போனா ஜூலை காற்றில்' என்ற பாடலை பா.விஜய் எழுதினார். ஜீவாவின் அப்படத்திற்கு, இந்தத் தலைப்பையும் அவர் ஓர் ஆப்ஷனாக வைத்திருந்தார். அவரது அசிஸ்டென்ட்டான KC.சுந்தரம், ஜீவாவிற்கு ட்ரிப்யூட் செய்யும் வண்ணம் தனது முதல் படத்திற்கு 'ஜூலை காற்றில்' எனத் தலைப்பிட்டுள்ளார்.
ராஜீவ், ஸ்ரேயா, ரேவதி என மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான காதலை, உறவுச்சிக்கலை மையமாகக் கொண்ட படமிது. படத்தை ஐந்து அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார் அறிமுக இயக்குநர் சுந்தரம்.
கடைசி அத்தியாயமான 'Moving on (கடந்து செல்லு) தான் படத்தின் சாரம். காதலில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற மைண்ட் பிளாக்-கைக் காலகாலமான தமிழ்ப்பட நாயகர்கள் ஆழப் பதிந்து விட்டனர். ஓர் உறவில் இருந்து வெளியேறுவது என்பது மிகப் பெரிய குற்றமாகவே திரைப்படங்கள் சதா போதித்து வருகின்றன. சமூகம் ஒரு transition பீரியடில் உள்ளது. கணவன் இறந்தால் ...