ஜுமான்ஜி: தி நெக்ஸ்ட் லெவல் விமர்சனம்
மீண்டும் ஒரு அதகள சாகசத்தோடு காட்டுக்குள் பயணம் மேற்கொண்டுள்ளனர் ராக் & கோ. இம்முறை மேலும் கலகலப்பிற்கு உத்திரவாதமளித்துள்ளனர்.
எட்டி (Eddie) எனும் முதியவர் பாத்திரம் ஒன்று வருகிறது படத்தில். இடுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ள அப்பெரியவருக்கு, ஜுமான்ஜி விளையாட்டுக்குள் ஆஜானபாகு ராக்கின் உருவம் கிடைக்கிறது. அந்தப் பெரியவரின் மனநிலைக்கு ஏற்றவாறு, ராக்குடைய ப்ரேவ்ஸ்டோனின் முக பாவனைகள் மாறுவது காமிக்கலாக ரசிக்கும்படி உள்ளது.
படத்தில் இன்னொரு ரசனையான கேரக்டர், திருடி மிங் ஃப்ளீட்ஃபூட் ஆகும். ஆவ்க்வாஃபினா எனும் அந்த நடிகை, ஸ்பென்சர் மிங் வடிவத்தை ஏற்கும் பொழுதும், பின் முதியவர் எட்டி அவ்வடிவத்தை எடுக்கும் பொழுதும் நல்ல வேறுபாடு காட்டியிருந்தார். திரையரங்கில் குழந்தைகள் ரசித்து மகிழும்படி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நெருப்புக்கோழிகள் துரத்தும் பொழுது தப்பிக்கும் சாகசம், நகரும...