“விக்ரமைத் தவிர வேறு எந்த நடிகராலும் முடியாது” – கே.ஈ. ஞானவேல் ராஜா | தங்கலான்
உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில், திரையரங்குகளில் தங்கலான் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ க்ரீன், நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா, ''ஒரே தருணத்தில் 'தங்கலான்', 'கங்குவா', 'வா வாத்தியார்' போன்ற படங்களைத் தயாரிப்பதற்குக் காரணம் எனக்கு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ், சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம். இதனைக் கடந்து வருவதற்கு மிகக் கடினமாக இருந்தது. இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வ...